மத்திய அரசு கொண்டு வந்த அக்னி பாத் திட்டத்தில் கப்பற்படையில் எஸ்எஸ்ஆர், மற்றும் மெட்ரிக் ரெக்ரூட் பிரிவில் 80ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த அக்னி பாத் திட்டத்தில் கப்பற்படையில் எஸ்எஸ்ஆர், மற்றும் மெட்ரிக் ரெக்ரூட் பிரிவில் 80ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் அக்னி பாத் திட்டத்தை கடந்த ஜூன் 14ம் தேதி தொடங்கியது. இந்தத் திட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பி, போராட்டங்கள் வெடித்தன.
இதன்படி, 4 ஆண்டுகள் மட்டுமே இளைஞர்கள் முப்படைகளிலும் பணியாற்ற முடியும். தேவைக்கு ஏற்ப பணியாற்றும் வீரர்களில் 25 சதவீதம் பேர் மட்டும் நிரந்தரமாக்கப்படுவார்கள். 4 ஆண்டுகள் பணி முடிந்து செல்லும் அக்னி வீரர்களுக்கு தொகுப்பு சேவா நிதியாக ரூ.11 லட்சம் வரை வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் சமீபத்தில் கடற்படையில் எஸ்எஸ்ஆர், எம்ஆர் பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அந்த வகையில் 80ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பங்கள் செய்துள்ளனர்.
இந்திய கடற்படையின் ட்விட்டர் தளம் வெளியிட்ட செய்தியில் “ இந்திய கடற்படையின் எஸ்எஸ்ஆர், எம்ஆர் பிரிவுக்கு இதுவரை 9.55 லட்சம் அக்னவீரர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 82ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள்” எனத் தெரிவித்துள்ளது.
கடற்படையின் அனைத்துப் பிரிவுகளிலும் பாலினச் சமத்துவம் கடைபிடிக்கப்படும் எனக் கடற்படை கடந்த ஜூன் 20ம் தேதி தெரிவித்தது. இதில் மகளிர் கடற்படை வீரர்கள் சேர்ப்பது குறித்து விரைவில் அறிவிக்கும். முப்படைகளிலும் அதிகாரிகள் அந்தஸ்துக்கு குறைவான பிரிவில் பெண்கள் நியமிக்ககப்பட உள்ளனர்.
கடற்படையின் துணை அட்மிரல் தினேஷ் கே திரிபாதி கூறுகையில் “ அக்னிபாத் திட்டத்தில் நேரடியாக எத்தனை பெண்களை பணிக்கு எடுப்பதுகுறித்து ஆய்வுசெய்து வருகிறோம். இந்திய கடற்படையில் தற்போது 30 பெண் அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். அக்னிபாத் திட்டத்தில் பெண்களையும் வேலைக்கு எடுக்க இருக்கிறோம். போர்க் கப்பல்களிலும் வேலைக்கு எடுக்க இருக்கிறோம்.
இந்த ஆண்டு நவம்பர் 21ம் தேதி முதல்பிரிவு அக்னி வீரர்களுக்கு பயிற்சி தொடங்கும். ஒடிசாவில் உள்ள ஐஎன்எஸ் சில்காவில் பயிற்சி தொடங்கும். இதற்கு ஆண், பெண் இருபாலரும் அனுமதிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்