டெல்லி மதுமானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். 9 முறை சம்மன் அனுப்பியும் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகாமல் இருந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி மதுமானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். 9 முறை சம்மன் அனுப்பியும் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகாமல் இருந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறை தன்னை கைது செய்ய தடைவிதிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை இன்று டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவால் வீட்டில் சோதனையிடத் தொடங்கினர். சோதனையின் தொடர்ச்சியாக டெல்லி முதல்வர் இப்போது அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே வழக்கில் ஏற்கெனவே முன்னாள் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர ஜெயின், ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். மார்ச் 16ஆம் தேதி தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் பத்திர வழக்கில் சீரியல் நம்பருடன் முழு விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!
டெல்லி உயர்நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு எந்த இடைக்கால நிவாரணமும் அளிக்க மறுத்ததை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை அவசர வழக்காகக் கருதி நள்ளிரவிலேயே விசாரணை நடத்தவும் கோரப்பட்டுள்ளது.
ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை உச்ச நீதிமன்றம் நள்ளிரவு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டது. ஆனால், நாளை விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அமலாக்கத்துறை டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கூடும்.
இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் கூடிய ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்ககளை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை 2021ஆம் ஆண்டு இறுதியில் நடைமுறைக்கு வந்தது. இதில் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியதில் சுமார் 100 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பாஜகவுக்கு இன்று இரண்டு இடத்தில் குட்டு: ஒன்று உச்ச நீதிமன்றம்; மற்றொன்று தேர்தல் ஆணையம்!