அருணாச்சல் திபெத்துடன் தான் எல்லையை பகிர்கிறது; சீனாவுடன் இல்லை.! சீனாவின் மூக்கை உடைத்த முதல்வர் பெ்மா காண்டு

By karthikeyan VFirst Published Nov 23, 2020, 5:59 PM IST
Highlights

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம், சீனாவின் தெற்கு திபெத் பிராந்தியத்தின் ஒரு பகுதி என்ற சீனாவின் கூற்றை மீண்டுமொரு முறை புறக்கணித்ததுடன் பதிலடியும் கொடுத்துள்ளார்.
 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம், சீனாவின் தெற்கு திபெத் பிராந்தியத்தின் ஒரு பகுதி என்ற சீனாவின் கூற்றை மீண்டுமொரு முறை புறக்கணித்ததுடன் பதிலடியும் கொடுத்துள்ளார்.

இந்தியாவுடன் எல்லை பிரச்னையை தொடர்ந்துவரும் சீனா, அருணாச்சல பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக உரிமை கொண்டாடிவருவதுடன், அதை திரும்ப திரும்ப வலியுறுத்தியும் வருகிறது.

இந்நிலையில், சீனாவின் கூற்றையும் அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடுவதற்கும் எதிராக பேசிவரும் அம்மாநில முதல்வர் பெமா காண்டு, மீண்டுமொரு முறை சீனாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பேசிய அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு, அருணாச்சல பிரதேசம் எல்லையை நேரடியாக சீனாவுடன் பகிரவில்லை; திபெத்துடன் தான் எல்லையை பகிர்கிறது. யாராலும் வரலாற்றை மாற்றியெழுத முடியாது. திபெத்தை சீனா வம்பாக இழுத்து இணைத்துக்கொண்டது உலகறிந்த உண்மை எனவும் பெமா காண்டு தெரிவித்துள்ளார்.
 

click me!