88 மாணவிகளை ஆடையில்லாமல் நிற்க வைத்த கொடூரம்! பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு!

First Published Nov 30, 2017, 5:19 PM IST
Highlights
Arunachal Pradesh Case filed against school teachers


88 பள்ளி மாணவிகளை உள்ளாடையுடன் நிற்க வைத்து தண்டனை வழங்கிய ஆசிரியர் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல் துறை அதிகாரி கூறியுள்ளார்.

அருணாச்சல பிரதேசம் மாநிலம், இட்டா நகரில் கஸ்தூரிபா காந்தி பாலக்கா வித்யாலயா என்ற புகழ்பெற்ற பற்றி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 7 ஆம் மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவிகள் 88 பேருக்கு, பள்ளி நிர்வாகம் மிகவும் மோசமான தண்டனை கொடுத்துள்ளது. 

அந்த மாணவிகள் அனைவரும் அனைத்து பள்ளி மாணவிகள் முன்னிலையில் உள்ளாடையுடன் நிற்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த கேவலமான செயலை பள்ளியில் நிரந்தர பணியில் இருக்கும் இரண்டு ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்சிக்கு வந்திருக்கும் ஆசிரியர் ஒருவரும் சேர்ந்த செய்துள்ளனர்.

மாணவிகள் உள்ளாடையுடன் நிற்க வைக்கப்பட்டதற்கான காரணம்... பள்ளியில் படிக்கும் ஏதோ ஒரு மாணவி பற்றியும், பள்ளியின் தலைமை ஆசிரியர் பற்றியும் யாரோ தவறாக லெட்டர் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த லெட்டர் 7 ஆம் வகுப்பிற்கும், 8 ஆம் வகுப்பிற்கும் இடையில் தரையில்  இருந்து எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த லட்டரை யார் எழுதியது என்பது தெரியாததால் இரண்டு வகுப்பிலும் உள்ள மாணவிகளுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் ஆசிரியர்கள் மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் நடந்த 4 நாட்கள் சென்ற பிறகும் இது குறித்து மாணவிகள் யாரும் வாய் திறக்கவில்லை. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட 88 மாணவிகளும் ஒன்றாக சேர்ந்து அருணாச்சல பிரதேச மாநில பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இந்த புகார் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும், இந்த புகார் குறித்து இட்டா நகர், காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு கொடூர தண்டனை வழங்கிய ஆசிரியர்கள் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

click me!