ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து.. பரபரப்பாக நடக்கும் வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

By Ansgar R  |  First Published Dec 11, 2023, 9:08 AM IST

Jammu Kashmir : அரசியலமைப்பின் 370வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட கோரிக்கைகள் மீது உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று வழங்க உள்ளது.


ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழக்கின் விளக்கம் ஒரு பார்வை 

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அன்று பிரித்தது. அதைத் தொடர்ந்து பலர் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட, தகவல் தொடர்பு முடக்கம் மற்றும் பல மாதங்களாக இருந்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டனர்.

Latest Videos

undefined

தம்பி... இந்த 300 கோடி யாருடைய பணம்? ராகுல் காந்தியின் விளக்கம் கேட்கும் ஜே. பி. நட்டா!

வெடித்த போராட்டங்களுக்கு மத்தியில் ஜம்மு காஷ்மீரில் மிக நீண்ட இணைய முடக்கமாக சுமார் 550 நாட்கள் நீடித்தது. ஒரு கட்டத்தில் 2019ம் ஆண்டு மத்திய அரசு விதித்த இந்த சட்டத்தை எதிர்த்து மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக 23 மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு வழக்கை வழக்கமான விசாரணையைத் தொடங்கியது. விசாரணை துவங்கியதில் இருந்து சரியாக 16 நாட்கள் நீடித்த விசாரணைக்குப் பிறகு, இறுதியாக உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 5-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.

சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழக சிறுமி உயிரிழப்பு... தரிசன நேரத்தில் அதிரடி மாற்றம்

இதனையடுத்து இன்று டிசம்பர் 11ம் தேதி இந்த வழக்கில் உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த இரத்துச் சட்டத்தின் சட்டப்பூர்வமான தன்மையை எதிர்த்துப் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது. உள்துறை அமைச்சகம், அக்டோபர் 2020 இல் ஒரு உத்தரவின் மூலம், முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 14 சட்டங்களில் திருத்தங்களை அறிமுகப்படுத்தியது, 12 சட்டங்களை ரத்து செய்தது நினைவுகூரத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!