தூக்கு தண்டணைக்காக காத்திருக்கும் 50 கைதிகள்! சாவை எதிர்நோக்கி நகரும் நாட்கள்…

First Published Sep 9, 2017, 3:55 PM IST
Highlights
50 face death sentence in Maharashtra


பா.ஜனதா ஆட்சி செய்யும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 50 தூக்கு கைதிகள் தண்டனை நிறைவேற்றும் உத்தரவுக்காக காத்திருக்கிறார்கள்.

இதில் மும்பைகுண்டு வெடிப்பு குற்றவாளியும் நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமுக்கு உதவிய 2 உதவியாளர்கள், 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளிகள் இருவர் அடங்கும்.

இருவருக்கு மட்டுமே

கடந்த 20 ஆண்டுகளில் இருவருக்கு மட்டுமே தூக்கு தண்டனை நம் நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், மும்பை தாக்குதல் தீவிரவாதியும், பாகிஸ்தானைச் சேர்ந்தவரான முகம்மது அஜ்மல் கசாப், யாகூப் மேமன் ஆகியோருக்கு மட்டும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் அஜ்மல் கசாப்புக்கு கடந்த 2012ம் ஆண்டு, நவம்பர் 21ந்தேதி மும்பை ஏரவாடா சிறையிலும், யாகூப் மேமனுக்கு கடந்த 2015, ஜூலை 30ந்தேதி நாக்பூர் சிறையிலும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

318 பேர் காத்திருப்பு

இந்நிலையில், 2014ம் ஆண்டுக்குரிய தேசிய குற்ற ஆவண அமைப்பு(என்.சி.ஆர்.பி.) அறிக்கையின்படி,  நாட்டில் தூக்கு தண்டனை விதி்க்கப்பட்டு காத்திருப்பவர்கள் 318 பேர். இதில் 8 பெண்கள் அடக்கம். இதில் 3 பெண்கள் உள்ளிட்ட 36 கைதிகள் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளனர்.

சக்திமில் வழக்கு

இதில் 2015-17ம் ஆண்டுக்கு இடையில், சிலருக்கு மஹாராஷ்டிரா நீதிமன்றங்களால் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதில் 2014ம்ஆண்டு பெண் புகைப்பட நிருபர் ஒருவரை சக்தி மில்லில் ைவத்து பலாத்காரம் செய்ததற்காக விஜய் ஜாதவ், முகம்மது காசிம் சேக், சலீம் அன்சாரி ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

மும்பை ரெயில் குண்டுவெடிப்பு

2011ம்ஆண்டு மும்பையில் ரெயில் குண்டுவெடிப்பு தொடர்பாக, கமல் அன்சாரி, பைசல் சேக், எஸ்டஸ்ஹாம் சித்திக், நவீத் கான், ஆசிப் பாஷிர் கான் ஆகியோருக்கு மும்பை நீதிமன்றம்,  கடந்த 2015, செப்டம்பரில் தூக்கு தண்டனை வழங்கியது.

மேலும், மஹாரஷ்டிராவில் லஷ்கர் இ தொய்வா அமைப்பு செயல்பட உதவிய 43 வயது பெண் ஒருவருக்கும் தூக்கு விதிக்கப்பட்டது. 2003ம்ஆண்டு, ஆகஸ்ட் 25ந்ததேதி மும்பை கேட்வே ஆப் இந்தியா, ஜாவேரி பஜாரில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் ஹனீப் சயத் அனீஸ், ஹனீப் மனைவி பெஹ்மிதா சயத் ஆகியோருக்கு தூக்கு விதிக்கப்பட்டு, அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.

குழந்தை கடத்தல்

மேலும், அஜானபாவி காவித் வழக்கில் ரேணுகா ஷிண்டே, சீமா ஷிண்டே ஆகிய இரு சகோதரிகளுக்கும் தூக்கு தண்டனை தரப்பட்டது. இவர்கள் இருவரும் புனே, நாசிக்கில் 12-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கடத்தி கொலை செய்த குற்றத்துக்கு இந்த தண்டனை தரப்பட்டது.

பி.பி.ஓ. பெண் ஊழியர் கொலை

2007ம்ஆண்டு பி.பி.ஓ. நிறுவன பெண் ஊழியர் ஜோதிகுமாரி சவுத்ரி என்பவரை கடத்தி, பாலியல் பலாத்காரம்செய்து கொலை செய்த புருஷோத்தம் போரட், பிரதீப் கோகடே ஆகியோருக்கும் தூக்கு தண்டனை தரப்பட்டு அதை எதிர்நோக்கி இருக்கின்றனர்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் தூக்கு தண்டனை கைதிகள் 50 பேர் தங்களின் வாழ்நாளை எண்ணிக்கொண்டு சாவுக்காக காத்திருக்கிறார்கள்.

click me!