தீவிரவாதிகளின் உடல்களுக்கு பாதுகாப்பு படையினர் அவமரியாதை வைரலாகும் வீடியோ குறித்து ராணுவம் ஆய்வு

First Published Sep 16, 2017, 5:15 PM IST
Highlights
army team criticize the terrorist deadbody


காஷ்மீர் மாநிலம், நகர் அருகே நவுகாமில் கடந்த சில நாட்களுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் இருவரின் உடல்களை பாதுகாப்பு படையினர் அவமரியாதை செய்தது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வௌியானது. இந்த வீடியோ குறித்து ஆய்வு செய்து விசாரணை செயயப்படும் என ராணுவம் தெரிவித்துள்ளது.

நகர் , அலிபாக் பகுதியில் உள்ள நவுகாம் எனும் இடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் பாதுகாப்பு படையினர் நடத்திய திடீர் என்கவுண்ட்டரில் அபு காசிம், அபு இஸ்மாயில் என்ற இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.  இவர்கள் இருவரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் எனத் தெரியவந்தது.

கடந்த ஜூலை 10-ந்தேதி அமர்நாத் யாத்திரை சென்று திரும்பிய பக்தர்கள் மீது தீவிரவாதிகள் நடத்தப்பட்டது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர், 17 பேர் காயமடைந்தனர். அந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்தவர் அபு இஸ்மாயில் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தீவிரவாதிகள் கொல்லப்பட்ட பின், அவர்கள் மீது நடப்பதும், ஏறி மிதிப்பதும் என பாதுகாப்பு படையினர் செய்வது போன்ற வீடியோ ஒன்று வௌியானது. மேலும், அதில் தீவிரவாதிகள் இருவரையும் தரையில் இழுத்துவருவது போன்ற காட்சிகளும் இடம் பெற்று இருந்தன.

இது குறித்து பாதுகாப்பு படையின் செய்தித்தொடர்பாளர் ராஜேஷ் கலியாவிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அவர் கூறுகையில், “ தீவிரவாதிகள் உடல்களை பாதுகாப்பு படையினர் அவமரியாதைக் குள்ளாக்கிய வீடியோ குறித்து ஆய்வு செய்யப்படும்’’ எனத் தெரிவித்தார்.

click me!