Army helicopter crashes: இந்திய ராணுவ ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்து.. ஒருவர் பலி.. 2 பேர் படுகாயம்..!

Published : May 04, 2023, 12:31 PM ISTUpdated : May 04, 2023, 12:48 PM IST
Army helicopter crashes: இந்திய ராணுவ ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்து.. ஒருவர் பலி.. 2 பேர் படுகாயம்..!

சுருக்கம்

ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் பகுதியில் 3 இந்திய ராணுவ வீரர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. 

ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் பகுதியில் 3 இந்திய ராணுவ வீரர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த  விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் 3 பேருடன் சென்றுக்கொண்டிருந்த போது ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்ததாகவும், இரண்டு பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். 

இதையும் படிங்க;- கார்கேவை கடவுள் அழைத்துக்கொள்வார்! பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்

இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இரண்டு பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க;-  பெண்ணை தீர்மானிப்பது உடையா.? மதமா.? தடைகளை தகர்த்து சாதித்த இரு சிங்கப்பெண்கள்.!!

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!