மல்லுக்கு நிற்கும் சீனா! ரூ.23,500 கோடிக்கு நவீன ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தம் செய்த இந்தியா!

By SG Balan  |  First Published Oct 10, 2023, 11:38 AM IST

ட்ரோன்களும், அந்நிய ட்ரோன்களைத் தடுப்பதற்கான கருவிகளும் ரூ.1,500 கோடி மதிப்பில் 14 ஒப்பந்தங்கள் மூலம் வாங்கப்படுகின்றன.


இந்தியா - சீனா எல்லையில் பனிப்போர் நீடிக்கும் நிலையில், இந்தியா ஓராண்டிற்குள் ரூ.23,500 கோடிக்கு நவீன ரக ஆயுதங்களை வாங்குவதற்கான நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. எல்லையில் ராணுவ பலத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆயுத ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

2020ஆம் ஆண்டு முதல் இந்தியா - சீனா இடையே கிழக்கு லடாக் அருகே உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (LAC) மோதல் போக்கு காணப்படுகிறது. இதனால் இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பதற்ற நிலையைச் சரிசெய்ய இந்தியாவும் சீனாவும் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளுடன் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

Tap to resize

Latest Videos

ஒரு நாளுக்கு 14 லட்சம் செலவாகுது... வீடியோ வெளியிட்ட கோடீஸ்வரரின் மனைவி... செம டோஸ் கொடுத்த நெட்டிசன்கள்

இந்த சூழலில் இந்திய ராணுவத்தின் ஆயுதப்படைகளுக்கு நவீன ஆயுதங்கள் வாங்க ரூ.23,500 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. அவசரகால ஆயுதக் கொள்முதல் திட்டத்தின் கீழ் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அதன்படி, ட்ரோன்கள், ஏவுகணைகள், ராடார் முதலிய கண்காணிப்புக் கருவிகள், தகவல் தொடர்பு சாதனங்கள், ராணுவ வாகனங்கள் போன்றவற்றை வாங்குவதற்காக பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

ராணுவத்துக்கு மட்டும் 70 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. கடற்படைக்கு 65 ஒப்பந்தங்களும் விமானப்படைக்கு 35 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி இருக்கின்றன. ரூ.11 ஆயிரம் கோடிக்கு ராணுவ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ரூ.8,000 கோடியில் விமானப்படைக்கும் ரூ.4,500 கோடியில் கடற்படைக்கும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

பல்வேறு நிறுனவங்களுடன் கையெழுத்தாகி இருக்கிற ஒப்பந்தங்களில், குறிப்பாக ட்ரோன்களுக்கு குறிப்பிடத்தக்க தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. ட்ரோன்களும், அந்நிய ட்ரோன்களைத் தடுப்பதற்கான கருவிகளும் ரூ.1,500 கோடி மதிப்பில் 14 ஒப்பந்தங்கள் மூலம் வாங்கப்படுவதாக ராணுவ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருமித்த குரலில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 5 மேற்கத்திய நாடுகள்

click me!