ஏப்ரல் 1 முதல் இவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி... மத்திய அரசு அறிவிப்பு!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 23, 2021, 4:22 PM IST
Highlights

ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் இணைநோய்கள் இல்லாத 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் ஓராண்டிற்கு பிறகு அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்றின் வேகம் தீவிரமாக இருப்பது கவலை அளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்கனவே  தெரிவித்திருந்தது. கொரோனா தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவில்ஷீல்ட், கோவேக்சின் தடுப்பூசிகள் செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களை அடுத்து தற்போது 60 வயதுக்கும் மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களை அடுத்து தற்போது 60 வயதுக்கும் மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவின் தீவிரம் அதிகரிப்பதை தடுக்கும் விதமாக முகக்கவசங்களை அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது மத்திய, மாநில அரசுகளுக்கு கூடுதல் கவனத்தை கொடுத்துள்ளது. 

இந்நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் இணைநோய்கள் இல்லாத 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் விதமாகவும், தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாகவும் இந்த அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

click me!