இந்தியாவில் பரவும் கொரோனா.. மக்கள் பீதி அடைய தேவையில்லை !! - அப்பல்லோ மருத்துவமனை அறிவுறுத்தல்!

By Raghupati RFirst Published Dec 23, 2022, 7:13 PM IST
Highlights

பொது இடங்களில் முக கவசங்களை அணிய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை கொரோனா தொற்று குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வரும் பி.எஃப்.7 வகை கொரோனா மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது.

இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு,  மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் வேகமாக பரவும் பி.எஃப்.7  கொரோனா  இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..ஏக்நாத் ஷிண்டே முதல் ரிஷி சுனக் வரை.. 2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட அரசியல்வாதிகள்!

இந்தியாவில்  பி.எஃப்.7 வகை கொரோனா தொற்று குஜராத்தில் இருவருக்கும்,  ஒடிசா மற்றும் ஆந்திராவில் தலா ஒருவருக்கும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்நிலையில் கொரோன தொற்றின் நிலைமை குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதில், ‘சீனாவில் கொரோனா தொற்றின் நிலைமை பற்றிய செய்திகள் பல பரவிவருகின்றது. இவை எந்தவித அடிப்படை இல்லாமல் பரவி வருகிறது. எனவே மக்கள் பீதியடைய தேவையில்லை. இந்தியாவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. சுமார் 220 கோடி டோஸ் இந்திய மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஓமிக்ரான் மாறுபாட்டால் தொற்று ஏற்பட்டது. இருப்பினும், நெரிசலான இடத்தில் முகமூடிகளைப் பயன்படுத்துவது, நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல் மற்றும் சானிடைசர்களைப் பயன்படுத்துதல் போன்றவையை மேற்கொள்ள வேண்டும்.

தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் இன்னும் எடுக்காதவர்கள், போட்டுக்கொள்ள வேண்டும். காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற சுவாச நோயின் அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை அணுக வேண்டும். மக்கள் பீதி அடையத் தேவையில்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பாக இருங்கள் என்று அறிவுறுத்தி உள்ளது.

இதையும் படிங்க..காது கேட்கும் கருவி 10 ஆயிரம் இல்லை.. 350 தான்! கடைசியாக ஒத்துக்கொண்ட அண்ணாமலை!

click me!