ஆந்திராவில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய பேருந்து..! 17 பேர் பலி…! வைரல் வீடியோ…!

By manimegalai aFirst Published Nov 20, 2021, 6:00 PM IST
Highlights

ஆந்திராவில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஆறுகளில் பெருத்துக்கெடுத்தும் ஓடும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காணவில்லை எனவும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவில் நிலை கொண்டுள்ளதால், சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ,கர்னூல் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து  கனமழை பெய்து வருகிறது . தொடர் மழையினால் நீர் நிலைகள் நிரம்பி, அணைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழைப்பிடிப்பு , கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆபத்தான இடங்களிலுள்ள மக்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. சுமார் 7 குழுக்கள் அடங்கிய தேசிய மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.  மேலும் வருவாய்துறையினர், தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் ஆகியோரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டையில் ஆற்று வெள்ளத்தில்  3 அரசு பேருந்துகள் சிக்கிக்கொண்டன. பேருந்தில் பயணம் செய்தவர்களில் 12 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த மீதி பேர் பத்திரமாக கரைக்கு கொண்டுவரப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மண்டபள்ளி, ராயவரம், கண்டலூரு போன்ற பகுதிகளில் மீட்பு படையினரால் மீட்கப்பட்டது. திருப்பதி, நெல்லூரில் வெள்ளத்தில் சிக்கி மேலும் 5 பேர் இறந்துள்ளனர் . பல ஏரிகள் உடைந்து பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சித்தூர் மாவட்டத்தில் நீவா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏராளமான ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. திருப்பதி மற்றும் கடப்பா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே பாதைகள் மழை வெள்ளத்தினால் சேதமடைந்துள்ளன. சித்தூர் மாவட்டம் ரேனிகுண்டா அருகே வெள்ளத்தில் சிக்கிய சுமார் 60க்கும் மேற்பட்டோரை தேசிய மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்டு பாதுக்காப்பான இடங்களுக்கு கொண்டு வந்தனர்.

சென்ற வியாழக்கிழமை மாலை முதல் கொட்டத் தொடங்கிய மழை காரணமாக, திருப்பதி திருமலை கோயில் மற்றும் மலைப் பகுதிகளை காட்டாற்று வெள்ளம் போல மழைநீர் சூழ்ந்துகொண்டது. சாலைகளில் பேருந்துகளும் கார்களும் அடித்துச் செல்வதையும் காண முடிந்தது.. மலைப் பாதையில் ஏராளமான இடங்களில் மண்சரிவு ஏற்பட்ட, போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. இந்நிலையில் திருமலையில் உள்ள பக்தா்கள் போக்குவரத்து சீராகும் வரை தங்கள் அறையிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா். அவா்களுக்கு தேவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

"

 

click me!