பிப்ரவரி 14 காதலர் தினம் மட்டுமா? இதுவும் தான்! பசு அணைப்பு தினத்தை கையில் எடுத்த விலங்குகள் நல வாரியம்

By Raghupati RFirst Published Feb 8, 2023, 2:55 PM IST
Highlights

காதலர் தினத்தில் 'பசு அணைப்பு தினத்தை' கொண்டாட விலங்குகள் நல வாரியம் மக்களை வலியுறுத்தி உள்ளது.

வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் உலகெங்கிலும் உள்ள ஜோடிகள் தங்களுக்குள் அன்பை பொழிய மற்றும் காதலை பெற மற்றும் காதலை வெளிப்படுத்த தங்களை தயார்படுத்தி கொண்டு வருகிறார்கள்.

காதலர் தினத்தையொட்டி காதலர் வாரம் பிப்ரவரி 7 முதல் ரோஸ் டேவுடன் துவக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், இந்திய விலங்குகள் நல வாரியத்துடன் இணைந்து இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக பிப்ரவரி 14 அன்று, அதாவது காதலை தினத்தன்று ‘பசு அரவணைப்பு தினத்தை’ கடைப்பிடிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இதையும் படிங்க..Viral Video: தாமிரபரணி ஆற்றில் அசால்ட்டாக ‘டைவ்’ அடித்த வயதான பாட்டி!.. வைரல் வீடியோ !!

காதலர் தினத்தை முன்னிட்டு, இந்திய விலங்குகள் நல வாரியம், பிப்ரவரி 14ஆம் தேதி 'பசு அணைப்பு தினத்தை' கடைப்பிடிக்குமாறு மக்களை வலியுறுத்தி உள்ளது. இந்திய கலாச்சாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தில் பசுக்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக இது கொண்டாடப்பட உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

யோகா தினத்தைப் போலவே, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், இந்திய விலங்குகள் நல வாரியத்துடன் இணைந்து இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக ‘பசு அணைப்பு தினத்தை’ அனுசரிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து விலங்குகள் நல வாரியத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்னவென்றால், ‘தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டும், வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும் மாற்றும் வகையில், அனைத்து பசுப் பிரியர்களும் பிப்ரவரி 14 ஆம் தேதியை பசு அணைப்பு தினமாக கொண்டாடலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கத்திய கலாச்சாரத்தின் கடுமையான தாக்கத்தால் வேத மரபுகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் இருப்பதாகவும், அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பசு அணைப்பு தினத்தை கொண்டாடுமாறு குடிமக்களுக்கு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய விலங்குகள் நல வாரியத்தின் சட்ட ஆலோசகர் பிக்ரம் சந்திரவன்ஷி இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்திய கலாச்சாரத்தின் மீது கருணை காட்ட மக்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். பசுக்களின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதும், மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால் மெல்ல மெல்ல விலகிச் செல்பவர்களை மீட்டெடுப்பதே இதன் நோக்கம் என்று கூறினார்.

இதையும் படிங்க..அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்.. இபிஎஸ் - ஓபிஎஸ்ஸுக்கு பறந்தது நோட்டீஸ் - அதிமுகவை துரத்தும் சர்ச்சை!

click me!