Andhra Train Accident : ஆந்திராவில் நடந்த கோர ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றது.
இன்று அக்டோபர் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விசாகப்பட்டினத்திலிருந்து ஒடிசாவின் ராயகடா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் விஜயநகரம் மாவட்டம் அருகே சென்றபோது தடம் புரண்டதால் ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 18 பேர் காயமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், விசாகப்பட்டினம் மற்றும் அனகாப்பள்ளி, விஜயநகரத்தின் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து முடிந்தவரை ஆம்புலன்ஸ்களை அனுப்பவும், அருகிலுள்ள மருத்துவமனைகளில் நல்ல மருத்துவ சேவையை வழங்க அனைத்து வகையான ஏற்பாடுகளைச் செய்யவும் உத்தரவிட்டுள்ளார் என்று முதல்வர் அலுவலக அறிக்கையை தெரிவிக்கின்றது.
The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh from the PMNRF for the next of kin of each deceased due to the train derailment between Alamanda and Kantakapalle section. The injured would be given Rs. 50,000. https://t.co/K9c2cRsePG
— PMO India (@PMOIndia)
undefined
"உடல்நலம், காவல்துறை மற்றும் வருவாய் உள்ளிட்ட பிற அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து விரைவான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கோர விபத்தில் 6 பயணிகள் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து கிழக்கு மத்திய ரயில்வே சிபிஆர்ஓ கூறுகையில், "விசியநகரத்திலிருந்து ராய்காட் நோக்கி பயணிகளுடன் பயணித்த ரயில், அதே வழித்தடத்தில் விசாகப்பட்டினத்திற்கு பலாசா செல்லும் பயணிகள் ரயிலில் மோதியதால், பெட்டிகள் தடம் புரண்டன என்றுதெரிவித்துள்ளது.
கேரளா குண்டு வெடிப்பு: தமிழக - கேரளா எல்லையில் மோப்ப நாய் உதவியுடன் வாகன சோதனை.!!
இந்நிலையில் இந்த ரயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக ரூ. 2,00,000 லட்சம் வழங்கப்படும் என்றும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 ரூபாய் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் பிரதமர் அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த கோர விபத்து காரணமாக 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், 15 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன என்றும், 7 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. பயணிகள் அப்பகுதியில் சிக்காமல் இருக்க பேருந்து ஏற்பாடுகள் செய்துள்ளோம் என்றும் தடங்களை ஓரளவு மீட்டுவிட்டோம் என்றும் கிழக்கு கடற்கரை ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D