இந்தியாவின் கடற்கரை பரப்பு 47.6% அதிகரிப்பு! தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?

By SG Balan  |  First Published Jan 6, 2025, 11:35 PM IST

Tamil Nadu coastline: கடந்த 50 ஆண்டுகளில் இந்தியக் கடற்கரை 7,516 கி.மீ-லிருந்து 11,098 கி.மீ ஆக விரிவடைந்துள்ளது. குஜராத், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கணிசமான அதிகரிப்பு காணப்படுகிறது. புதுச்சேரியில் கடற்கரை சுருங்கியுள்ளது. தமிழ்நாடு இரண்டாவது நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது (1,068 கி.மீ).


இந்தியாவின் கடற்கரை கடந்த 50 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50% விரிவடைந்துள்ளது. 1970 இல் 7,516 கிமீ ஆக இருந்த நிலையில், 2023-24 இல் 11,098 கிமீ வரை விரிந்துள்ளது. மேற்கு வங்கம், குஜராத், கோவா போன்ற மாநிலங்களிலும் கடற்கரைப் பகுதி அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் புதுச்சேரியில் 10.4% கடற்கரை பகுதி சுருங்கியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தப் புள்ளிவிவரங்கள் தெரியவந்துள்ளன. புதிய விதிமுறைகளின் அடிப்படையில் கடற்கரை விரிவாக்கம் மற்றும் கடல் அரிப்பு ஆகியவை அளவிடப்பட்டுள்ளன.

Tap to resize

Latest Videos

ஆந்திர பிரதேச கடற்கரை 973 கி.மீ.யில் இருந்து கிட்டத்தட்ட 80 கி.மீ அதிகரித்து 1,053 கி.மீ. தொலைவுக்கு நீண்டுள்ளது. மிக நீளமான கடற்கரையைக் கொண்ட மாநிலமாக குஜராத் தொடர்கிறது. 1,068 கிமீ (இதற்கு முன்பு 906.9 கிமீ) தொலைவுக்குக் கடற்கரை பரப்பைக் கொண்டுள்ள தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

EPFO 3.0 ரிலீஸ் தேதி அறிவிப்பு! இனி PF பணம் ஏடிஎம்மில் ஈசியா எடுக்கலாம்!

குஜராத் முதலிடம், தமிழ்நாடு 2வது இடம்:

குஜராத்தின் கடற்கரை பரப்பு 1970ல் 1,214 கி.மீ. ஆக இருந்தது. கடந்த 53 ஆண்டுகளில் 2,340கி.மீ ஆக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள கடற்கரைப் பகுதியின் பரப்பு இந்த காலகட்டத்தில் 357% அதிகரித்துள்ளது. 157 கிமீ இல் இருந்து 721 கிமீ ஆக விரிந்துள்ளது.

தேசிய அளவில், 1970 தரவுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் கடற்கரை பரப்பு 47.6% அதிகரித்துள்ளது. ஒன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள கடற்கரைகளின் நீளத்தின் கூடியிருக்கிறது. தேசிய கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைப்பு இந்தியாவின் கடல்சார் அளவீடு குறித்து உருவாக்கியுள்ள புதிய முறையைப் பயன்படுத்தியதுதான் எண்ணிக்கை அதிரிக்க முக்கியக் காரணம்.

புதிய அளவீட்டு முறை:

தேசிய ஹைட்ரோகிராஃபிக் அலுவலகம் மற்றும் சர்வே ஆஃப் இந்தியாவின் அறிக்கையின்படி, 1970ஆம் ஆண்டின் கடற்கரைத் தரவுகள் அந்த நேரத்தில் இருந்த அளவீட்டு நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால், புதிய முறை கடற்கரையின் உண்மையான நீளத்தைத் துல்லியமாக அளிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கடற்ரையின் மாறும் தன்மையையும் பிரதிபலிக்கிறது எனவும் தெரிவிக்கின்றனர்.

SIP vs STP: மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டுக்கு சிறந்தது எது? முழு விவரம் இதோ!

click me!