ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சனிக்கிழமை விஜயவாடாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சனிக்கிழமை விஜயவாடாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
விஜயவாடாவில் "மேமந்த சித்தம்" யாத்திரையின்போது, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீச்சு நடந்துள்ளது. இதில், அவரது இடது புருவத்தில் சிறிய காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு அங்கு முதலுதவி செய்யப்பட்டது.
பிரசாரத்தின் போது முதலமைச்சருடன் இருந்த யுவஜன ஸ்ராமிகா விவசாயி காங்கிரஸ் கட்சியின் (ஒய்எஸ்ஆர்சிபி) எம்எல்ஏ வெல்லம்பள்ளி சீனிவாச ராவுக்கும் இடது கண்ணில் காயம் ஏற்பட்டது. உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, முதலவர் ஜெகன் தொடர்ந்து சாலைப் பயணத்தை மேற்கொண்டார்.
இதுதான் ரியல் கேரளா ஸ்டோரி! சவுதியில் மரண தண்டனை கைதியை மீட்க திரண்ட ரூ.34 கோடி நிதி!
தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக ஒய்எஸ்ஆர்சிபி தலைவர்கள் கூறுகின்றனர். பூவுக்குள் கல்லை மறைத்து வைத்து முதல்வரை நோக்கி விசினர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. முதலவர் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அவர்களை எதிர்த்து பாஜக, தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனை ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன. மாநிலத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மே 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.