
பெண்களுடன் தகாத உறவு, சூதாட்டம் உள்ளிட்ட பழக்கத்தால் பல ஆண்டுகளாக கணவனால் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவதாக பெண் ஒருவர் டுவிட்டரில் கதறி அழுதுள்ளது சமூகள் வலைத்தளங்களில் வைரளாகி வருகின்றது.
பல முறை புகார் அளித்தும் கணவன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் இது தனது கடைசி முயற்சி என்றும் இப்போதும் நீதி கிடைக்காவிட்டால் உயிரை விடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் மனக் குமுறலை வெளிபடுத்தியுள்ளார்.
சினிமா இயக்குனர் அசோக் பண்டிட் பெண் ஒருவர் கண்ணீர் விட்டு கதறும் வீடியோவை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிர்ருள்ளார். அந்த வீடியோவில் பெண் பல ஆண்டுகளாக தான் கணவனால் சித்திரவதைக்கு ஆளாவதாகக் கண்ணீர் விட்டுக் கதறுகிறார்.
ஆட்டோமொபைல் தொழில் செய்யும் தன்னுடைய கணவர் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்திரவதைக்கு உள்ளாவதாக அந்தப் பெண் கூறுகிறார். தன்னுடைய குழந்தைகளின் நலனுக்காகவே அவருடன் வாழ்ந்து வருவதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
ஆனால் சூதாட்டம், பெண்களுடன் தகாத உறவு உள்ளிட்ட பழக்கங்களால் தொடர்ந்து துன்புறுத்தல்கள் தருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நான் உறங்கிக் கொண்டிருந்த கட்டிலில் மின்சாரத்தை பாய்ச்சி என்னைக் கொள்ள முயன்றார். இது குறித்து கார் போலீசில் புகார் அளித்துள்ளேன்.
ஆனால், காவல் ஆணையர் வழக்கு பதியாமல் என்னுடைய கணவனுக்கு சாதகமாகவே செயல்படுகிறார். இதுவரை எனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு போலீசாரை கேட்டு வருகிறேன், ஆனால் அவர்கள் எந்த உதவியும் எனக்கு செய்யவில்லை.
தன்னுடைய ஒரே வீட்டை கூட கணவர் அவருடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் நேற்று முதுகில் பாட்டிலால் உடைத்து காயம் ஏற்படுத்தியதாகவும் அந்த பெண் கழருகிறார்.
என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. கடைசி முயற்சியாக சமூக ஊடகங்கள் மூலம் உதவி கேட்கிறேன். எனக்கு நீதி கிடைக்க உதவி செய்யுங்கள், அவ்வாறு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் உயிரை விடுவதை விட வேறு வழியில்லை என்றும் அந்த பெண் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்ப்பவர்கள் மனதை கரைய வைத்துள்ளது.