விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட மொத்தம் 14 பேர் பயணித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் உள்ள ராணுவ மையத்தில் ஹெலிகாப்டர் மூலம் பயிற்சி மேற்கொண்டபோது, அடர் பனிமூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ராணுவ உயர் அதிகாரி வந்த இந்த ஹெலிகாப்டர் ஆனது விபத்தில் சிக்கி இருக்கிறது.
undefined
சூலூர் விமானப்படை மைதானத்தில் இருந்து வெலிங்டன் சென்ற போது ஹெலிகாப்படர் விபத்தில் சிக்கியுள்ளது.விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் 14 பேர் பயணம் செய்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பனி மூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது என்று கூறப்படுகிறது.
நீலகிரி ஆட்சியர் அம்ரித், ‘ விபத்தில் 14 பேர் பயணித்ததாகவும், 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதில் பயணித்த ராணுவ உயரதிகாரி நிலைமை என்ன ஆனது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை ‘ என்று தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அந்த ராணுவ ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட மொத்தம் 14 பேர் பயணித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இந்திய படைத்தளபதி பிபின் ராவத் பயணம் செய்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.