காதல் மனைவியை 16 இடங்களில் குத்திக் கிழித்த ஆட்டோ டிரைவர்! ஹாஸ்டலுக்கே சென்று அறுத்து எறிந்த கொடூரம்...

 
Published : May 10, 2018, 01:59 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
காதல் மனைவியை 16 இடங்களில் குத்திக் கிழித்த ஆட்டோ டிரைவர்! ஹாஸ்டலுக்கே சென்று அறுத்து எறிந்த கொடூரம்...

சுருக்கம்

An auto driver who stabbed his wife in 16 places

தன்னோடு குடும்பம் நடத்த வராத காதல் மனைவியை கணவரே கொடுரமாக குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள ஆலப்புழாவை சேர்ந்தவர் சுமையா. இவரும் வட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சஜிர் என்பவரும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள், இவர்களுக்கு  2 குழந்தைகள் உள்ளன.

திருமணமான சில ஆண்டுகளிலேயே கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களது 2 குழந்தைகளும் சஜிருடன் வசித்து வருகின்றனர். மேலும் சஜிரும், சுமையாவும் இனி சேர்ந்து வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்ததை தொடர்ந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் சுமையா வேலைக்கு சமீபத்தில் சேர்ந்தார். மேலும் அந்த விடுதியிலேயே அவர் தங்கியிருந்தார். இதற்கிடையில் அந்த விடுதிக்கு சென்ற சஜிர் விவாகரத்து வழக்கு தொடர்பாக பேச வேண்டுமென்று கூறி சுமையாவை வெளியில் அழைத்தார்.

இதை தொடர்ந்து அவரும் வெளியில் பேச வந்துள்ளார். அந்த விடுதி முன்பு சாலையோரத்தில் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதனால் ஆத்திரமடைந்த சஜிர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுமையாவை சரமாரியாக குத்தினார். சுமையாவின் உடலில் 16 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. அவர், அலறியபடி ரத்த வெள்ளத்தில் பக்கத்தில் இருந்த வாய்காலில் சாய்ந்தார்.

உடனடியாக அங்கு திரண்ட பொதுமக்கள் சஜிரை மடக்கிப் பிடித்தனர்.

மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுமையாவை அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சஜிரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!