Amit Shah:இந்திக்கு மொழிபெயர்க்கப்பட்ட எம்பிபிஎஸ் பாடங்கள்: மத்தியப்பிரதேசத்தில் அமித் ஷா அறிமுகம் செய்கிறார்

By Pothy RajFirst Published Oct 14, 2022, 6:13 AM IST
Highlights

ஆங்கிலத்திலிருந்து இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட எம்பிபிஎஸ் பாடப்புத்தகங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 16ந்தேதி மத்தியப்பிரதேச மாநிலத்தில் அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.

ஆங்கிலத்திலிருந்து இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட எம்பிபிஎஸ் பாடப்புத்தகங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 16ந்தேதி மத்தியப்பிரதேச மாநிலத்தில் அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.

ஆங்கிலத்திலிருந்து இந்தி மொழிக்கு எம்பிபிஎஸ் பாடப்புத்தகங்கள் மொழி பெயர்க்ககப்பட்டு வருவது இதுதான் முதல்முறையாகும். எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டில் வரும் அனாட்டமி, பிசியாலஜி, பயோகெமிஸ்டிரி ஆகிய பாடங்கள் மட்டும் இந்தியில் மொழிபெயர்க்கப்பட உள்ளன.

சாப்பிடும்‘தட்டு’; தேங்காய் ‘ஸ்ட்ரா’! 5 தொழில்முனைவோர்களுக்கு மட்டும் பிரதமர் மோடி அழைப்பு

 இந்த மொழிபெயர்க்கப்பட்ட பாடங்கள் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் நடைமுறைக்கு வரும்.
இதன் மூலம் எம்பிபிஎஸ் படிப்பு படிக்கும் மாணவர்கள் பாடங்களை இந்தியில் மட்டும் படிக்க வேண்டும், பேராசிரியர்கள் இந்தியில் மட்டும் நடத்த வேண்டும் என்பதல்ல. இந்தியில் படிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் படிக்கலாம்.

மத்தியப்பிரதேசத்தில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியில் ஏற்கெனவே இதுபோன்று இந்தியில் மருத்துவப் படிப்புகள் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றன. மத்தியப் பரிதேச மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் கூறுகையில் “  இந்த அளவுக்கு கல்வியை சிறப்பாக பிரதமர் மோடி வடிவமைத்துள்ளார். அதனால்தான் எம்பிபிஎஸ் படிப்பை இந்தியில் பயிற்றுவிக்க முடிகிறது

பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி வரி உறுதி: சப்பாத்தி வேறு ரகமாம் !: குஜராத் ஏஏஏஆர் தீர்ப்பு

நாங்கள் இந்தி மொழியை முன்னெடுத்துச் செல்ல எங்களால் முயன்ற அளவு செய்கிறோம். எம்பிபிஎஸ் பாடங்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. முதல்கட்டமாக முதலாம் ஆண்டு படிக்கும் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு 3 பாடங்கள் மட்டும் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, அடுத்ததாக 2வது ஆண்டு பயிலும் மாணவர்களின் பாடங்களும் இந்தியில் மொழி பெயர்க்கப்படும்

ஜெர்மன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மருத்துவக் கல்வியை தங்களின் தாய்மொழியில்தான் கற்றுக்கொடுக்கின்றன. அதேபோல் இந்தியாவில் ஏன் செய்ய முடியாது. சுதந்திரத்துக்குப்பின் 75 ஆண்டுகளில் மருத்துவப்படிப்புகள் இந்தியில் பயிற்றுவிக்கப்படும் பரிசோதனை இதுதான் முதன்முதலாகும்.

மருத்துவப் படிப்புகளை இந்தியில் கற்றுக்கொடுக்கும் திட்டத்துக்கு மருத்துவ வல்லுநர்கள் சிலர் தொடக்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்தனர். மாணவர்கள் சர்வதேச அளவில் போட்டியிடும் தன்மையை இழந்துவிடுவார்கள் என்று அஞ்சினர்.

அரசியல் கத்துக்குட்டிகெல்லாம் பதில் அளிக்க முடியாது! அமித் ஷாவை விளாசிய நிதிஷ் குமார்

இருப்பினும் பாடங்களை ஆங்கிலத்திலிருந்து இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு அதன் முதல் வரைவு நகலை வல்லுநர்களிடம் அளித்து, அதை சீரமைத்து, 2வது வரைவு நூல்களை உருவாக்கினோம். பல்வேறு வல்லுநர்கள் பாடங்களை ஆய்வு செய்து சரியாக இருக்கிறது என்று தெரிவித்தபின்புதான் பாடங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன” எனத் தெரிவித்தார்
 

click me!