வங்கி ஊழியருக்கு ஹாப்பி நியூஸ்... விரைவில் வெளியாக உள்ள சூப்பர் அறிவிப்பு!!

Published : Oct 13, 2022, 05:53 PM IST
வங்கி ஊழியருக்கு ஹாப்பி நியூஸ்... விரைவில் வெளியாக உள்ள சூப்பர் அறிவிப்பு!!

சுருக்கம்

அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய வங்கிகள் நிர்வாகிகள் அமைப்பும், வங்கிகளின் தொழிற்சங்க நிர்வாகிகளும் செய்து கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில், அனைத்து வங்கிகளுக்கும் 2-ஆவது மற்றும் 4-ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறையை மாற்று முறை ஆவணங்கள் சட்டம் 1881-இன் அடிப்படையில் செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்துமாறு மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: சாப்பிடும்‘தட்டு’; தேங்காய் ‘ஸ்ட்ரா’! 5 தொழில்முனைவோர்களுக்கு மட்டும் பிரதமர் மோடி அழைப்பு

அதன்படி, மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறை நாளாக இருக்கும். இந்த நிலையில் அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் தற்போது 2 மற்றும் 4 வது சனிக்கிழமைகளில் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலை மாறி மீதமுள்ள சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தும் தீவிரவாதிகளை கொல்லுவதற்கு காரணமாக இருந்த நாய் ஜூம் பரிதாபமாக உயிரிழப்பு!!

மேலும் இதற்கு மத்திய அரசும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற வங்கிகள், உள்ளூர் வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்றும் கூறப்படுகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Cheap Beach Destinations : கோவா இல்லை.. குறைந்த செலவில் அழகான 5 பீச்சுகள்.. லிஸ்ட் இதோ
Kisan Pension : தினமும் ₹1.80 சேமிப்பு போதும்.! 60 வயசுக்கு மேல ₹36,000 பென்ஷன்.! விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்!