சாப்பிடும் தட்டையும் சேர்த்து சாப்பிடும் தட்டுகள், தேங்காயில் உருவான ஸ்ட்ரா குழாய் உள்ளிட்ட வித்தியாசமான கண்டுபிடிப்புகளை உருவாக்கிய 5 தொழில்முனைவோர்களுக்கு பிரதமர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.
சாப்பிடும் தட்டையும் சேர்த்து சாப்பிடும் தட்டுகள், தேங்காயில் உருவான ஸ்ட்ரா குழாய் உள்ளிட்ட வித்தியாசமான கண்டுபிடிப்புகளை உருவாக்கிய 5 தொழில்முனைவோர்களுக்கு பிரதமர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.
வரும் 17ம் தேதி ஏறக்குறைய நாடுமுழுவதும் 300 தொழில்முனைவோர்களைச் சந்தித்துப் பேச உள்ளார். அந்தச் சந்திப்பின்போது 5 தொழில்முனைவோர்களுக்கு மட்டும் சிறப்பு அழைப்பை பிரதமர் அலுவலகம் விடுத்துள்ளது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில்: அதிவேக பார்சல் சர்வீஸ் விரைவில் தொடக்கம்
இந்த 5 தொழில்முனைவோர்களும் கேரள வேளாண் பல்கலைக்கழகம், வேளாண் வர்த்தக இன்குபேஷன் மையத்தில் இருந்து தங்கள் தொழிலைத் தொடங்கி இன்று வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.
கேரளாவின் ஆலுவாவைச் சேர்ந்த வினய் பாலகிருஷ்ணன், பெங்களூரைச் சேர்ந்த சஜி வர்கீஸ், பாலக்காட்டைச் சேர்ந்த ரிஜிஷ் ராஜன், ஆலப்புழாவைச் சேர்ந்த மனாஸ் மது, வயநாட்டைச் சேர்ந்த ஜெய்மி சஜி ஆகியோர் பிரதமர் அலுவலகம் செல்ல உள்ளனர்.
இதில், விஜய் பாலகிருஷ்ணன், சாப்பிடும் தட்டுதான் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது இவர் கண்டுபிடித்த தட்டில் சாப்பிட்டு முடித்தவுடன், தட்டையும் சேர்த்து சாப்பிட்டுவிடலாம். விரைவில் ஸ்பூன், கரண்டி ஆகியவற்றையும் இதுபோல் தயாரிக்க இருக்கிறார்.
ஆர்பிஐக்கு நெருக்கடி! செப்டம்பர் சில்லறை பணவீக்கம் 7.41 சதவீதமாக அதிகரிப்பு
சஜி வர்கீஸ் என்பவர், தேங்காயில் இருந்து குளிர்பானங்கள் குடிக்கும் ஸ்ட்ராவைக் கண்டுபிடித்துள்ளார். இந்த ஸ்ட்ரா மூலம் குளிர்பானங்களைக் குடித்துவிட்டு அதை அப்படியே சாப்பிடலாம். இந்த ஸ்ட்ராவுக்கு வெளிநாடுகளில் ஏகப்பட்ட வரவேற்பு
ரிஜிஷ் ராஜன், என்பது எழுத்தறிவு பெறாத விவசாயிகளும் பயன்படுத்தக்கூடிய மொபைல் ஆப்ஸைக்கண்டுபிடித்துள்ளார். மனாஸ் மது என்பவர், பழங்களில் சிப்ஸ் செய்து வருமானம் ஈட்டி வருகிறார், ஜெய்மி சஜி என்பவர் பலாப்பழத்தில் ரெடி டூ குக் பாயாசம் செய்து விற்பனை செய்து வருகிறார்.
கேரள புத்தாக்க மையத்தின் இயக்குநர் கே.பி.சுதிருக்கும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சாப்பிடும் தட்டு தயாரிக்கும் பாலகிருஷ்ணன் கூறுகயைில் “நான் விர் நேச்சுரல்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறேன். புவிவியலில் முதுநிலைப் பட்டம் முடித்துள்ளேன். தூஷன் என்ற பெயரில் நான் சாப்பிடும் தட்டு ஒன்றை கண்டுபிடித்தேன். கோதுமை மாவால் செய்யப்படும் இந்த தட்டில் சாப்பிட்டுவிட்டு, தட்டையும் சேர்த்து சாப்பிடலாம்.
பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி வரி உறுதி: சப்பாத்தி வேறு ரகமாம் !: குஜராத் ஏஏஏஆர் தீர்ப்பு
இந்த தட்டுகளுக்கு வடமாநிலங்களில்நல்ல தேவை இருக்கிறது, தொடர்ந்து ஆர்டர்கள் கிடைத்து வருகின்றன. 10இன்ச்,மற்றும் 6இன்ச் அளவில் தட்டுகள் அதிகமாக விற்பனையாகின்றன. விரைவில் ஸ்பூன், கரன்டி, கத்தி ஆகியவற்றைபயன்படுத்திவிட்டு அப்படியே சாப்பிடும் வகையில் உருவாக்கப் போகிறேன். மிகவும் சுத்தமான முறையில், தட்டுகள் அனைத்தையும் ரோபோக்கள் செய்கின்றன. சாப்பிட்டுவிட்டு, தட்டை வீசி எறியாமல் தட்டையும் கடைசியாகச் சாப்பிடலாம்”எனத் தெரிவித்தார்
பெங்களூருவில் உள்ள கிறிஸ்ட் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக வர்கீஸ் உள்ளார். இவர் தேங்காய் ஸ்ட்ரா குறித்துக் கூறுகையில் “ தேங்காய் ஸ்ட்ராவுக்கு வெளிநாடுகளில் நல்லதேவை இருக்கிறது, குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் நல்ல ஆர்டர் வருகிறது. மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் அமெரி்க்காவின் ஆர்டரை சரிவர எடுக்க முடியவில்லை” எனத் தெரிவித்தார்