கர்நாடக கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் தடை தொடரும் என்று கர்நாடக கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்தார்
கர்நாடக கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் தடை தொடரும் என்று கர்நாடக கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்தார்
கர்நாடகாவில் உள்ள கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடைவிதிக்கப்பட்ட வழக்கில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
கர்நாடக ஹிஜாப் தடை வழக்கு; கடந்த வந்த பாதை: சுருக்கமான பார்வை
இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா இரு மாறுபட்ட தீர்ப்பை இன்று அளித்தனர். இதில் மனுதாரர்களின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ஹேமந்த் குப்தா தள்ளுபடி செய்தார், ஆனால், கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தும், நீதிபதி சுதான்சு துலியா உத்தரவிட்டார்.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிய மாணவிகளுக்கு தடை தொடருமா அல்லது நீக்கப்படுமா என்று கல்வித்துறை அமைச்சசர் பி.சி.நாகேஷிடம் இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி வரி உறுதி: சப்பாத்தி வேறு ரகமாம் !: குஜராத் ஏஏஏஆர் தீர்ப்பு
அதற்கு அவர் பதில் அளிக்கையில் “ உலகில் பல நாடுகளில் புர்ஹா மற்றும் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது, பெண்கள் சுதந்திரம் குறித்து பேசப்படுகிறது. ஆதலால் கல்வி முறைக்கு சிறந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக எதிர்பார்த்தது, ஆனால் வேறுபட்ட தீர்ப்புக் கிடைத்துள்ளது. அடுத்த கட்ட அமர்வுக்கு இந்த வழக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனால், கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் வழக்கில் வழங்கிய தீர்ப்பு செல்லுபடியாகும். அனைத்து பள்ளிகள், கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை இருக்கும், மத அடையாளங்களுக்கு அனுமதியில்லை.
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஆணைப்படி, நம்முடைய பள்ளிகள், கல்லூரிகள்செயல்படும். அதன்படிதான் மாணவ, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வர வேண்டும்.
ஹிஜாப்புக்கு எதிரான தடை தொடரும். கர்நாடக கல்விச்சட்டத்தின்படி, எந்தவிதமான மதரீதியான அடையாளத்தையும் மாணவர்கள் வகுப்பறைக்கு கொண்டு செல்ல முடியாது. ஆதலால், வகுப்பறைக்குள் எந்த மாணவியும் ஹிஜாப் அணிந்து செல்ல முடியாது” எனத் தெரிவித்தார்
கர்நாடக ஹிஜாப் தடை வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வேறுபட்ட தீர்ப்பு
கர்நாடக உள்துறை அமைச்சர் அரஹா ஞானேந்திரா நிருபர்களிடம் கூறுகயைில் “ ஹிஜாப் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஊடகம் வாயிலாக அறிந்தேன்.
ஒரு நீதிபதி மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளார், மற்றொரு நீதிபதி கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்துள்ளார். இரு மாறுபட்ட தீர்ப்புக் கிடைத்துள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன் செல்கிறது.இது தலைமை நீதிபதியின் முடிவைப் பொறுத்தது. அவரின் தீரப்புக்காக கர்நாடக அரசு காத்திருக்கிறது” எனத் தெரிவித்தார்