உயிரே போனாலும் காஷ்மீரை விட்டுக் கொடுக்க மாட்டேன்... அமித் ஷா ஆவேசம்..!

By Thiraviaraj RMFirst Published Aug 6, 2019, 12:09 PM IST
Highlights

காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண தனது உயிரையும் கொடுப்பேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். 

காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண தனது உயிரையும் கொடுப்பேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். 

காஷ்மீர் விவகாரம் குறித்து மக்களவையி அமித்ஷாவிடம் எதிர்கட்சி உறுப்பினர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப்பெற எந்த நடவைக்கையும் எடுக்கவில்லை என காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அமித் ஷா, ‘பாகிஸ்தான் மற்றும் சீன ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க என் உயிரையும் கொடுக்க தயார். ஜம்மு காஷ்மீருக்காக சட்டம் இயற்றும் உரிமை நாடாளுமன்றத்துக்கு உள்ளது. அரசியல் காரணங்களுக்காக ஜம்மு- காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவில்லை.

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை மறந்து விடாதீர்கள். இந்த விவகாரத்தில் ஐநா தலையிட காங்கிரஸ் விரும்புகிறதா? காஷ்மீர் தொடர்புடைய சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளது. காஷ்மீர் தொடர்புடைய விவகாரங்களில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு யாருக்காவும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசுக்கு உள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீர் பகுதிகளையும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது’’ என அவர் தெரிவித்தார்.  

இதையும் படிங்க:- தாறுமாறாக அதிகரிக்கப்போகும் தங்கத்தின் விலை... இரண்டு மடங்காக உயர வாய்ப்பு..!

click me!