புல்வாமா தாக்குதல்: இவர்கள் தான் காரணம்..சத்யபால் மாலிக் அதிரடி - அமித் ஷா கொடுத்த விளக்கம்

Published : Apr 23, 2023, 11:32 AM IST
புல்வாமா தாக்குதல்: இவர்கள் தான் காரணம்..சத்யபால் மாலிக் அதிரடி - அமித் ஷா கொடுத்த விளக்கம்

சுருக்கம்

புல்வாமா தாக்குதலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தினார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிரு நீர்மின் திட்டத்தில் பணியாற்றிய ஊழியர்கள், அரசுப் பணியாளர்களுக்கு 2,200 கோடி ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டது. இதில் மோசடி நடைபெற்றதாகக் கூறி இரு வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.  இதுகுறித்து விளக்கம் அளித்த சத்யபால் மாலிக், காப்பீடு வழக்கில் சிபிஐ சில விளக்கங்களைக் கேட்டுள்ளதாகவும், அதுகுறித்து தான் பதிலளிப்பேன் என கூறியிருந்தார். இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் டெல்லி ஆர்.கே புரத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்திருந்தார்.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இந்த தகவலை டெல்லி காவல்துறை மறுத்தனர். அதுமட்டுமில்லாமல், ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் சில நாட்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “புல்வாமா தாக்குதலுக்கு உள்துறை அமைச்சகமே காரணம் என்று பிரதமர் மோடியிடம் கூறியதாகவும், ஆனால் அதைப்பற்றி பேசாமல் அமைதியாக இருக்குமாறு மோடி தன்னிடம் கூறியதாகவும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இதையும் படிங்க..12 மணி நேர வேலை யார் யாருக்கு? எந்த நிறுவனங்களுக்கு பொருந்தும்? முழு விபரம்

இந்த நிலையில் தனியார் செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இதில் சத்யபால் மாலிக்கிற்கு பதிலடியை கொடுத்தார். அப்போது பேசிய அவர், “ சம்பந்தப்பட்ட விவகாரத்தில் மறைப்பதற்கு பாஜக அரசு எதையும் செய்யவில்லை. அதுமட்டுமில்லாமல், இந்தப் பிரச்னையைப் பொது மேடையில் விவாதிக்கக் கூடாது. 

ஒருவேளை இதில் முறைகேடுகள் ஏதேனும் நடந்திருப்பதாக அவருக்கு தெரிந்திருந்தால், அதனை பதவியிலிருந்தபோதே அவர் பேசியிருக்க வேண்டும். இப்போது எதற்கு அதைப்பற்றி கேள்வியெழுப்ப வேண்டும். இது நம்பகத்தன்மை மீதான சோதனைக்கு அழைப்பு விடுக்கிறது” என்று அமித் ஷா அதிரடியாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க..ஒரு நைட்டுக்கு 80 ஆயிரம்.. மாடல் அழகிகளை வைத்து பாலியல் தொழில் செய்த பிரபல நடிகை கைது.!!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து.. 2 பெட்டிகள் எரிந்து நாசம்.. அலறிய 158 பயணிகளின் நிலை என்ன?
ஒரு சிகரெட் 72 ரூபாய்! அதிரடி வரி உயர்வு மசோதா.. புகைபிடிப்பவர்களுக்கு காத்திருக்கும் ஷாக்!