தசரா விழாவில் விபரீதம் !! பொது மக்கள் மீது ரெயில் மோதி விபத்து… 50 பேர் பலி!!

Published : Oct 19, 2018, 08:55 PM IST
தசரா விழாவில் விபரீதம் !! பொது மக்கள் மீது ரெயில் மோதி விபத்து… 50 பேர் பலி!!

சுருக்கம்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் தசரா கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் ஏராளமான பட்டாசுகள் வெடித்ததால் பொது மக்கள் பயந்து ஓடினர். அப்போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியதில் 50 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்

இந்தியாவில் இன்று தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் பகுதியில் தசரா விழா கொண்டாடப்பட்டது.

அமிர்தசரஸ் அருகே உள்ள ஜோடாபதக் என்னுமிடத்தில்  இன்று மிகப் பிரமாண்டமாக தசரா விழா கொண்டாடப்பட்டு வந்தது. ரயில் தண்டவாளம் அருகே, விழாவில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். அப்போது  பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வந்த நிலையில், அதிலிருந்து தப்பிப்பதற்காக ரயில் பாதை அருகே பொது மக்கள் ஒடினர் ,

அப்போது அவ்வழியே வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று பொது மக்களின்  மீது மோதியது. இச்சம்பவத்தில் 100பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. முதற்கட்டமாக 50 வரை என பலியாகியுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!
அதிசயம்! 10வது மாடியில் இருந்து விழுந்தும் உயிர் தப்பிய முதியவர்.. குஜராத்தில் பகீர் சம்பவம்!