என் குழந்தைகளை காணும்! என் உயிருக்கு ஆபத்து காப்பாத்துங்கள் ரெஹானா கதறல்!

By manimegalai aFirst Published Oct 19, 2018, 4:48 PM IST
Highlights

கேரளாவில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் சுவாமி அய்யப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிக்கலாம் என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதில் இருந்து ஐயப்ப பக்தர்கள் பலர் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு வருகிறார்கள்.
 

கேரளாவில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் சுவாமி அய்யப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிக்கலாம் என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதில் இருந்து ஐயப்ப பக்தர்கள் பலர் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு வருகிறார்கள்.

இந்த தீர்ப்புக்கு எதிர்மறையாக பல கருத்துக்கள் நிலவி வந்தாலும், தற்போது ஐய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளதால்... பெண்கள் பலர் ஐயப்பன் கோவிலுக்கு போயே ஆக வேண்டும் என மலை எற முயற்சித்து வருகிறார்கள். இந்நிலையில்  ஆந்திராவைச் சேர்ந்த தொலைக்காட்சி பெண் செய்தியாளர் கவிதா, கொச்சியைச் சேர்ந்த ரெஹானா பாத்திமா ஆகிய இருவர் சபரிமலை உள்ளே நுழைய முயன்ற போது அவர்களை அனுமதிக்க கூடாது என போராட்டம் நடத்தியதால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.  

இந்த நிலையில், பம்பை வந்த ரெஹானா பாத்திமா செய்தியாளர்களிடம் மலை ஏறாமல் பாதியிலேயே வந்தது குறித்து கூறுகையில் "நான் ஐயப்பனைக் காண வேண்டும் என்ற ஆசையில்  இருமுடியை தலையில் சுமந்து வந்தேன். திடீர் என போராட்டம் காரணமாக திரும்பிவர வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இவ்வளவு   தூரம் சென்றதே மகிழ்ச்சியாக உள்ளது என கூறினார்".

பின் திடீர் என அழ தொடங்கிய அவர் தன்னுடைய வீடு தாக்கப்பட்டுள்ளது என்றும், என்னுடைய குழந்தைகளைக் காணவில்ல என கூறி தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும் கூறியுள்ளார்.

எனவே, தன்னை கொச்சியில் உள்ள தன்னுடைய வீடுவரை கொண்டுவிட வேண்டும் எனவும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் காவல்துறையினரிடம் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

click me!