‘அமேசான்’ நிறுவனரை உச்சத்தில்....உட்கார வைத்த ‘பிளாக் பிரைடே’...உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்; சொத்து மதிப்பு தெரியுமா?

First Published Nov 25, 2017, 9:18 PM IST
Highlights
amazan owner is no one rich man in the world

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஒருநாள் பிளாக் பிரைடே விற்பனையின் மூலம் அமேசான் நிறுவனர் ஜெப் பீசாஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

பிளாக் பிரைடே

ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை ‘பிளாக் பிரைடே’ என அழைத்து கொண்டாடுவார்கள். இந்த கொண்டாடத்தின்  போது மக்கள் ஏராளமான பொருட்களை வாங்குவார்கள் என்பதால், மிகப்பெரிய கடைகள், நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடிகளை அறிவிக்கும்.

தள்ளுபடி

இந்த ஆண்டு ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்களும் ஏராளமான தள்ளுபடிகளையும், சலுகைகளையும் அளித்து இருந்தன. ஆன்-லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் ‘பிளாக் பிரைடே’வுக்காக ஏராளமான சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவித்து இருந்தது. இதைப் பார்த்த மக்கள் அமேசான் நிறுவனத்தில் பொருட்களை ஆர்டர் செய்து குவித்து விட்டனர். 



ரூ.6.45 லட்சம் கோடி

இதனால், ஒரே நாளில் அமேசான் நிறுவனர் சொத்து மதிப்பு 204 கோடி டாலர் மதிப்பு உயர்ந்து, 10 ஆயிரம் கோடியாக டாலராக, இந்திய மதிப்பில் ரூ.6.45 லட்சம் கோடியாக அதிகரித்தது.
  

முதலிடம்

இம்மாதம் 24-ந்தேதி 9790 கோடியாக டாலராக இருந்த நிலையில், அடுத்த ஒருநாளில் 10 ஆயிரம் கோடி டாலராக உயர்ந்துவிட்டது. இதன் மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்து, மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி செப் பீசாஸ்முதலிடத்தை பிடித்துள்ளார். வெள்ளிக்கிழமை மட்டும் அமெரிக்க பங்குச்சந்தையில் அமேசான் நிறுவனத்தின் பங்கின் விலை எகிறியது. வர்த்தகம் முடிவில் ஒரு பங்கின் விலை ரூ.76 ஆயிரத்துக்கு(1,186டாலர்) விற்பனையானது.

click me!