demonetisation:பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆய்வு செய்வோம்: மத்திய அரசு, ஆர்பிஐக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

By Pothy Raj  |  First Published Oct 12, 2022, 4:46 PM IST

2016ம் ஆண்டு மத்திய அரசு செய்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா, அது செய்யப்பட்ட வழிமுறைகள் நியாயமானதா என்பதை ஆய்வு செய்வோம், எங்களின் வரம்பு தெரியும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


2016ம் ஆண்டு மத்திய அரசு செய்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா, அது செய்யப்பட்ட வழிமுறைகள் நியாயமானதா என்பதை ஆய்வு செய்வோம், எங்களின் வரம்பு தெரியும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் விரிவான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்தது.

Tap to resize

Latest Videos

கடந்த 2016ம் ஆண்டு, நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்தது. இதன்படி, புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்து. இதற்கு பதிலாக புதிய ரூ.2000, ரூ.500, ரூ.100 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

புழக்கத்தில் இருந்த பணம் பெருவாரியாக வங்கி செயல்முறைக்குச் சென்றது.  அதற்கு மாற்றாக போதுமான அளவு பணம் அச்சடிக்காமல் மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்ததால் மக்கள் பெரும் சிரமப்பட்டனர். தங்கள் பணத்தையே வங்கியிலிருந்து எடுக்க முடியாமலும், ஏடிஎம்களில் இருந்து எடுக்க முடியாமல் கடும் வேதனை அடைந்தனர். ஏடிஎம்களிலும், வங்கிகளிலும் பணம் எடுக்க வரிசையில் நின்ற பலர் உயிரிழந்தனர். 

அடுத்த ஆண்டு பட்ஜெட் எப்படி இருக்கும்? நிர்மலா சீதாராமன் சூசகம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதிகளிடம் இருந்து கள்ளநோட்டு ஒழிக்கப்படும், தீவிரவாதம் ஒழிக்கப்படும், கள்ளநோட்டுகள் வங்கிக்குள் வந்துவிடும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் ரிசர்வ் வங்கியின் இறுதி அறிக்கையில் நாட்டில் புழக்கத்தில் இருந்த பணமும், ரிசர்வ் வங்கிக்கு வந்த பெரிதாக மாற்றமில்லை எனத் தெரிவித்தது. அதாவது, கள்ளநோட்டுகள் எதிர்பார்த்த அளவு சிக்கவில்லை எனத் தெரியவந்தது.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை சட்டத்துக்கு உட்பட்டு செய்யப்பட்டதா என்று விசாரிக்க உத்தரவிடக்கோரி ஏராளமானோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

 

உச்ச நீதிமன்ற நீதிபதி, எஸ்.ஏ. நசீர் தலைமையில்,நீதிபதிகள் பிஆர் காவே, ஏஎஸ் போண்ணா, வி.ராமசுப்பிரமணியன், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது.

கையைப் பிசையும் கர்நாடகா! லம்பி வைரஸால் கால்நடைகளுக்கு பாதிப்பு அதிகரிப்பு! வியாபாரமும் காலி

மத்திய அ ரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கட்ரமணி,சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா  ஆஜராகினார், மனுதாரர் ஒருவர் தரப்பில், முன்னாள் மத்தியநிதிஅமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பர் ஆஜராகினார். மனுதாரர் விவேக் நாராயன் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் ஆஜராகினார். 

மத்திய அரசு சார்பில் ஆஜராகிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில் “ இதுபோன்ற அதிகமான முக்கியத்துவம் இல்லாத விஷயங்களில் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கக்கூடாது” எனத் தெரிவித்தார்

இதைக் கண்டித்த மனுதாரர் வழக்கறிஞர் ஷியாம் திவான் “ உங்கள் வார்த்தை வியப்பாக இருக்கிறது, அரசியல்சாசன அமர்வு நேரத்தை வீணடிக்கிறது என்று கூறுகிறீர்கள். ஆனால், இதற்குமுந்தைய நீதிபதிகள் அமர்வு, அரசியல்சாசன அமர்வு விசாரி்க்க வேண்டிய முக்கியத்துவம் இருக்கிறது எனத் தெரிவித்தது” என்றார்

4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை தொடக்கம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேசுகையில் “ இந்த விவகாரம் முக்கியத்துவம் அல்லாதது என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். இதுபோன்ற பணமதிப்பிழப்பு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் தனியாக சட்டம் இயற்றுவது அவசியம்” எனத் தெரிவித்தார்

நீதிபதி நசீர் தலைமையிலான அமர்வு கூறுகையில் “ ஒரு விவகாரம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு முன்வந்துவிட்டால் அதுகுறித்து பதில் கூற  வேண்டியது கடமையாகிவிடும்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு எடுக்கப்பட்டதா, அல்லது பயன்தரக்கூடியதா, அல்லது நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டதா என்பதை ஆராய்வதற்கு இருதரப்பினரும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் இதை ஆய்வு செய்வது அவசியமாகிறது. இந்த வழக்கில் அரசின் கொள்கை மற்றும் நோக்கம் என்பது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது

5ஜியில் ஜியோ டாப் ஸ்பீடு! ஒரு மூவி டவுன்லோடுக்கு 85 வினாடிதானா! ஏர்டெல் காலி

நீதிமன்றத்தின் வரம்பு என்ன என்பது எங்களுக்குத் தெரியும். எங்களுக்குள் லட்சுமண ரேகை இருக்கிறது. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை எவ்வாறு செய்யப்பட்டது என்பதை ஆய்வு செய்வது அவசியம். அதற்கு வழக்கறிஞர்கள் வாதத்தை கேட்டு முடிவு செய்வோம். 

இந்த வழக்கில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் விரிவான, முழுமையான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கை நவம்பர் 9ம்தேதி ஒத்திவைக்கிறோம்” என உத்தரவிட்டனர்.


 

click me!