
டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைமையிலான அரசை இதுவரை செயல்படவிடாமல் கழுத்தை நெறித்தீர்கள். இனிமேல், செயல்பட மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் சிவசேனா அறிவுரை வழங்கியுள்ளது. மக்களால் தேர்ததெடுக்கப்பட்ட அரசை செயல்பட மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா அல்லது முதல்வருக்கு அதிகாரம் உள்ளதா என்பது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவால் அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.