அனைத்து மாநிலமொழிகளையும் தேசிய மொழிகளாக அறிவிக்க வேண்டும்... மக்களவையில் அ.தி.முக. எம்.பி. தம்பிதுரை பேச்சு...

First Published Aug 9, 2017, 7:58 PM IST
Highlights
All states should be declared national languages mp


நாட்டில் உள்ள அனைத்து பிராந்திய மொழிகளையும், தேசிய மொழிகளாக அறிவித்து, அதற்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அ.தி.முக. எம்.பி.யும், மக்களவை துணை சபாநாயகருமான எம். தம்பிதுரை பேசினார்.

வௌ்ளையனே வௌியேறு இயக்கத்தின் 75-வது ஆண்டு விழாவையொட்டி, மக்களவையில் நேற்று சிறப்பு விவாதம் நடந்தது. இதில் அ.தி.மு.க கட்சியின் எம்.பி. எம். தம்பிதுரை பேசியதாவது-

நாட்டின் சுதந்திரத்துக்காக அனைத்து மொழி பேசும் மக்களும் போராடி இருக்கிறார்கள். ஏதேனும் ஒரு மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு பதிலாக, அனைத்து பிராந்திய மொழிகளையும் சமமாக பாவிக்க வேண்டியது நாடாளுமன்றத்தின் தலையாய கடமையாகும்.

நம்நாட்டில் பேசப்படும் அனைத்து மொழிகளையும் தேசிய மொழியாக கருத வேண்டும், அதை பிராந்திர மொழிகளாகக் கருதக்கூடாது. தமிழ், தெலுங்கு, வங்காளி உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் அதிகாரப்பூர்வ சட்ட அந்தஸ்து கொடுத்து, நாட்டின் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்.

இப்போது கூட நான் தமிழில் பேசினால், நான் ஆங்கிலத்திலும், இந்தியிலும் பேச கட்டாயப்படுத்தப்படுகிறேன். அவையில் உள்ள உறுப்பினர்கள் பிராந்திய மொழிகளான தமிழ், வங்காளம் ஆகியவற்றை அறிந்திருக்கவில்லை .

அதனால், இந்தி அல்லது ஆங்கிலத்தில் கேட்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். நாடாளுமன்றத்திலும் இந்தி, ஆங்கிலம் மொழிபெயர்ப்பு மட்டுமே இருக்கிறது.

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு அளப்பரியது. ஏராளமான தலைவர்கள் போராட்டத்தால் பங்கேற்று உயிர் தியாகம் செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்துடன், திராவிட இயக்கம் வேறுபட்டதுதான். ஆனால், நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டுள்ளனர்.

எங்கள் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர், தீவிரமான காந்தியவாதி.  தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால், காதி உடை அணிய அனுமதி கொடுத்தால் மட்டுமே திருமணம் செய்வேன் என்று தாயிடம் கண்டிப்புடன் கூறினார். ஆனால், அதை அவர்கள் தாய் விரும்பவில்லை. இறுதியில், எம்.ஜி.ஆர். விருப்பப்படி நடந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

click me!