ஏர் இந்தியா - எத்தியோப்பியன் விமானம் மோதி விபத்து... டெல்லியில் பரபரப்பு...

Asianet News Tamil  
Published : Aug 09, 2017, 06:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
ஏர் இந்தியா - எத்தியோப்பியன் விமானம் மோதி விபத்து... டெல்லியில் பரபரப்பு...

சுருக்கம்

flight crash at delhi air port

டெல்லி விமான நிலையத்தில், நின்று கொண்டிருந்த ஏர் இந்திய விமானம் மீது எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் மோதி 

விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து விமான போக்குவரத்து இயக்குநரகம் ஆய்வு செய்து வருகிறது.

டெல்லி விமான நிலையத்தில் நேற்று ஏர் இந்திய விமானம் நின்று கொண்டிருந்தது. அப்போது விமான நிலையத்தில் தரையிரங்கிய எத்தியோப்பியன் விமானம், திடீரென மோதியுள்ளது. 

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் இடது இறக்கை மீது எத்தியோப்பியன் விமானம் மோதியது. இந்த விபத்து காரணமாக எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. பேரழிவு சம்பவம் தவிர்க்கப்பட்டதாகவே கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து, விமான போக்குவரத்து இயக்குநரகம் ஆய்வு செய்து வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம், ஏர் இந்தியா மிற்றும் இண்டிகோ விமானங்கள் ஓடுபாதையில் நேருக்குநேர் சந்தித்தன. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளரின் எச்சரிக்கை காரணமாக மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஜெட் வேகத்தில் பலமாகும் பாஜக..! இடிந்து விழும் கம்யூனிஸ்ட் கோட்டை.. பீதியில் காங்கிரஸ்..!
சென்னை, திருச்சி, நாகர்கோவில் பயணிகளுக்கு புதிய ரயில்கள்.. முழு ரூட் லிஸ்ட் இங்கே