வறுமை, கல்வியறிவின்மை, ஊழலை ஒழிக்க சிறப்பு நடவடிக்கைகள் மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு...

 
Published : Aug 09, 2017, 06:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
வறுமை, கல்வியறிவின்மை, ஊழலை ஒழிக்க சிறப்பு நடவடிக்கைகள் மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு...

சுருக்கம்

special action for education corruption prime minister speech

ஊழல், கல்வியறிவின்மை, வறுமை ஆகியவை நாட்டின் மிகப்பெரிய சவால்களாக உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் இவற்றை ஒழிக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மக்களவையில் பிரதமர் மோடி நேற்று பேசினார்.

வௌ்ளையனே வௌியேறு இயக்கம் தொடங்கப்பட்டு 75-ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மக்களவையில் நடந்த சிறப்பு விவாதத்தில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது-

2017ம் ஆண்டில் இருந்து 2022ம் ஆண்டுக்குள் இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிடும். 1942ம் ஆண்டு முதல் 1947ம் ஆண்டுக்கு இடையில் இருந்த அதே உத்வேகத்தை உருவாக்குவது அவசியம்.

நாட்டின் வளர்ச்சிப் பாதையை ஊழல் மோசமாக பாதித்துள்ளது. ஊழல், வறுமை,கல்வயறிவின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவை மிகப் பெரிய சவால்களாக நமக்கு இருக்கின்றன. இதில் இருந்து நம் நாடு விடுபட வேண்டும். இதில் இருந்து அனைவரும் விடுபடுவது அவசியமாகும். ஒரு நேர்மறையாக மாற்றத்துக்கு நாம் செல்வது அவசியம்.

கடந்த 1942ம்ஆண்டு ‘செய் அல்லது செத்துமடி’ என்ற கோஷம் பிரபலமாக இருந்தது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு  ‘நாங்கள் செய்வோம், உறுதியாகச் செய்வோம்’ என்ற முழக்கம் இருக்கும்.

2022ம் ஆண்டுக்குள் இந்தியா கண்டிப்பாக நேர்மறையான மாற்றங்களை கொண்டு வர முயற்சிக்க வேண்டும். இது மற்ற நாடுகளுக்கு உத்வேகமாக இருக்கும்.

கடந்த 1942ம் ஆண்டு சூழல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சாதமான சூழலாக இருந்தது. இப்போது, அதே சூழல், அதாவது உலகச் சூழல் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கிறது.

 அடுத்த 5 ஆண்டுகளில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க  எம்.பி.க்கள் அனைவரும் வேற்றுமைகளை மறந்து, கூட்டு முயற்சி எடுக்க வேண்டும்.

இந்த வௌ்ளையனே வௌியேறு இயக்கம் என்பது புதிய தலைமையை உருவாக்கியது. மகாத்மா காந்தியின் போராட்டத்துக்கு ஆதரவை பெருக்கியது. இந்த சூழலை நாம் நினைவு கூர்ந்து, நமது நாட்டை வலுப்படுத்த வேண்டும்.

இந்த இயக்கத்தில் நாட்டின் அனைத்து தரப்பு, பகுதி மக்களும், சமூகத்தினரும், விவசாயிகளும், தொழிலாளர்களும் ஒன்றாக இணைந்து போராடினார்கள். இப்போது இல்லாவிட்டால் எப்போதும் இல்லை என்ற முழுக்கத்துடன் செயல்பட்டார்கள். மக்கள் தங்கள் உரிமைகள் குறித்து அறிந்து இருக்கும் அதே நேரத்தில் கடமையையும் மறந்துவிடக்கூடாது.

நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து ஊழலை ஒழிப்போம். ஏழை மக்களுக்கு உரிமையை பெற்றுத் தருவோம்.  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வோம். ஊட்டத்துக் குறைபாட்டை முடிவுக்கு கொண்டு வருவோம், மகளிர் முன்னேற்றத்துக்கான தடைகளை நீக்குவோம், கல்வியறிவின்மையை நீக்குவோம். அதை நாம் செய்வோம்

இவ்வாறு அவர் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!