கொரோனா அச்சுறுத்தல்... நாளை முதல் அனைத்து பள்ளிகளும் மூடல்… எங்கேனு தெரியுமா?

By Narendran SFirst Published Jan 14, 2022, 5:09 PM IST
Highlights

மத்தியபிரதேசத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள் வரும் 31ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மத்தியபிரதேசத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள் வரும் 31ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கானோர் இந்த தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 47 ஆயிரத்து 417 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,63,17,927 ஆக அதிகரித்துள்ளது.  அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 380 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,85,035 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 84,825 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,47,15,361 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு 11,17,531 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,54,61,39,465 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 76,32,024 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 18,86,935 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 69,71,61,315 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் கொரோனாவை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படுவதாக மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.

மத்தியபிரதேச மாநிலத்தில் பள்ளிகள் 50 சதவிகித இருக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. மாணவ மற்றும் மாணவிகள் பள்ளிகளுக்கு வந்து நேரடி வகுப்புகளில் பங்கேற்று வந்தனர். இதற்கிடையில், அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று ஒரேநாளில் 4 ஆயிரத்து 31 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 652 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் வரும் 31ம் தேதி வரை மூடப்படுவதாக மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இன்று உத்தரவிட்டுள்ளார். நாளை முதல் 31ம் தேதி வரை 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து தனியார், அரசு பள்ளிகளும் மூடப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

click me!