அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து... அவசரமாக டெல்லி திரும்பினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்!!

Published : Dec 08, 2021, 06:33 PM ISTUpdated : Dec 08, 2021, 06:35 PM IST
அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து... அவசரமாக டெல்லி திரும்பினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்!!

சுருக்கம்

மும்பையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ரத்துசெய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவசர அவசரமாக டெல்லி திரும்பியுள்ளார். 

மும்பையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ரத்துசெய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவசர அவசரமாக டெல்லி திரும்பியுள்ளார். ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், தலைமை ராணுவத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக இந்திய விமான படை அறிவித்துள்ளது.  கோவை சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர் காட்டேரி பார்க் என்ற இடத்தில் மலைமுகட்டில் சிக்கி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 14 வீரர்களில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்திருந்தது.

இதனை ஆய்வு செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் குன்னூர் புறப்பட்டார். இதற்கிடையே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், தலைமை ராணுவத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக இந்திய விமான படை அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய விமானப் படை இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவில் மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் ஜனாதிபதியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையே பாதுகாப்புக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இந்த சூழலில் தான் மும்பையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ரத்துசெய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவசர அவசரமாக டெல்லி திரும்பியுள்ளார். இந்த கூட்டத்தில் முப்படைகளின் தளபதியாக யாரை நியமிப்பது, அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

இளம் வயதினரிடையே திடீர் மரணம் அதிகரிப்பு.. கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா?
ஒரே ஃபிரேம்ல ரெண்டு GOAT.. சச்சின் கையால் 'நம்பர் 10' ஜெர்சி வாங்கிய மெஸ்ஸி!