ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்புத் தெரிவித்து 2 நாட்கள் வேலை நிறுத்தம் !!  வரும் 9, 10 தேதிகளில் நாடு முழுவதும் லாரிகள் ஓடாது !!!

Asianet News Tamil  
Published : Oct 05, 2017, 08:08 AM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்புத் தெரிவித்து 2 நாட்கள் வேலை நிறுத்தம் !!  வரும் 9, 10 தேதிகளில் நாடு முழுவதும் லாரிகள் ஓடாது !!!

சுருக்கம்

all india lorry strike on october 9th and 10th

ஜி.எஸ்.டி. வரி, டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வருகிற 9 மற்றும் 10–ந் தேதிகளில் வேலைநிறுத்தம் செய்வது என்று அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அகில இந்திய மோட்டார் போக்குவரத்து மகாசபை சார்பில் பல்வேறு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இதில் மோட்டார் போக்குவரத்து மகாசபை தலைவர் எஸ்.கே.மிட்டல், நிர்வாகிகள் குல்தரன்சிங் அத்வால், ரஜீந்தர் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, டீசல் விலை உயர்வு போன்றவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் 2 நாட்கள் வேலைநிறுத்தம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

வருகிற 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் 2 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தை ஏ.ஐ.டி.டபுள்யு.ஏ., ஏ.சி.ஓ.ஜி.ஓ.ஏ. மற்றும் சிம்டா உள்ளிட்ட சங்கங்களும் இணைந்து நடத்துகின்றன. இதையடுத்து  9–ந் தேதி காலை 8 மணி முதல் 10–ந் தேதி இரவு 8 மணி வரை லாரிகள் ஓடாது  என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

4.30 மணிநேரத்தில் 19 பீர்.! போட்டிபோட்டு குடித்த ஐடி ஊழியர்கள்.! தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா!
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா?