அதிர்ச்சி..! போனில் மருத்துவர் சொல்ல சொல்ல நர்ஸ் செய்த "சிசேரியன்"...! பலிகடா ஆனது குழந்தை 

Asianet News Tamil  
Published : Oct 04, 2017, 06:00 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
அதிர்ச்சி..! போனில் மருத்துவர் சொல்ல சொல்ல நர்ஸ் செய்த "சிசேரியன்"...! பலிகடா ஆனது குழந்தை 

சுருக்கம்

NURSES attempt the cesarean in orissa hospital babe dies

 தொலைபேசியில் மருத்துவ ஆலோசனை பெற்று பிரசவம் பார்த்ததால் இறந்து போனது குழந்தை...

 ஒடிசாவில் உள்ள ஒரு மருத்துவமனையில், தொலைபேசியில் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று கர்ப்பிணிக்கு செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில், குழந்தை இறந்தே பிறந்தது. 

ஒடிசா மாநிலம் கேந்த்ராபாடா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், நிறைமாத கர்ப்பிணியான ஆர்த்தி சமாலுக்கு சிசேரியன்  செய்ய  திட்டமிடப்பட்டுள்ளது 
அந்த குறிப்பிட்ட தினத்தில், மருத்துவர் இல்லாததால்,மருத்துவரை போனில் தொடர்பு கொண்டு,அவர் சொல்ல சொல்ல செவிலியர்கள் சிசேரியன் செய்துள்ளனர். அவ்வாறு செய்யும் போது ஏற்பட்ட குளறுபடியால் குழந்தை இறந்தே பிறந்துள்ளது.மேலும், ஆர்த்தியின் கருப்பையும் சேதமடைந்துவிட்டது.

 இதனை தொடர்ந்து ,தனது குழந்தையின் உடலோடு காவல்நிலையத்துக்குச் சென்ற,கணவர் மருத்துவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கும் போது,செவிலியர்கள் செய்த இந்த செயலால் என்னுடைய முதல் குழந்தையையும் இழந்தேன்..என் மனைவியின் கருப்பையும் சேதமடைந்துள்ளது என தெரிவித்தார்.இவர்களின் அலட்சியத்தால் எங்கள் வாழ்கையே தொலைந்து விட்டது என அழுகிறார் கணவர்....இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

PREV
click me!

Recommended Stories

உலக GDP-யில் 25%: இந்திய-ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தால் அமெரிக்கா, சீனாவுக்கு ஏன் பதற்றம்?
சிக்கியது ஈரானை தாக்கச் சென்ற அமெரிக்க கப்பல்..! வழியில் தடுத்து நிறுத்திய 3 இஸ்லாமிய நாடுகள்..!