ராணா சங்கா ஒரு 'துரோகி' எனக் கூறிய எம்.பி.க்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு!

ராணா சங்காவை 'துரோகி' என்று கூறிய சமாஜ்வாதி எம்பியின் கருத்துக்கு அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார். பாஜக வரலாற்றைத் திரிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Akhilesh Yadav defends Samajwadi MP who called Rajput king Rana Sanga a 'traitor' sgb

நாடாளுமன்றத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சி எம்பி ராம்ஜிலால் சுமன் ராஜ்புத்திர அரசர் ராணா சங்காவை துரோகி என்று கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இப்போது, அவரது பேச்சுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியுள்ளார். பாஜக தலைவர்கள் ஔரங்கசீப் பற்றிப் பேசி வரலாற்றைத் திரிக்க முயல்வதாகவும் அவர் சாடியுள்ளார்.

மார்ச் 21ஆம் தேதி ராஜ்யசபாவில் பேசிய சுமன், இந்திய முஸ்லிம்கள் பாபரை தங்கள் முன்னோடியாகக் கருதுவதில்லை, மாறாக நபிகள் நாயகத்தையும் சூஃபி மரபையும் பின்பற்றுகிறார்கள் என்று கூறினார். பின்னர், இப்ராஹிம் லோடியை தோற்கடிக்க பாபரை இந்தியாவிற்கு அழைத்தது மேவார் ஆட்சியாளர் என்று கூறிய அவர், இந்துக்கள் ஏன் ராணா சங்காவை விமர்சிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

Latest Videos

"முஸ்லிம்கள் பாபரின் சந்ததியினர் என்று அழைக்கப்பட்டால், இந்துக்கள் துரோகி ராணா சங்காவின் சந்ததியினராக இருக்க வேண்டும்" என்று சுமன் கூறியது பாஜக மற்றும் இந்து அமைப்புகளிடமிருந்து கடுமையான எதிர்வினைகளைத் தூண்டியது.

சுமனின் பேச்சை ஆதரித்ததற்காக அகிலேஷ் யாதவையும் பாஜக கடுமையாகச் சாடியுள்ளது. அவரது நிலைப்பாடு இந்து சமூகத்தை அவமதிப்பதாகவும் , சமாஜ்வாடி கட்சி திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுவதாகவும் பாஜக குற்றம் சாட்டியது.

பாஜக தலைவர் அமித் மாளவியா கூறுகையில், "சமாதானப் பிரச்சாரத்தில் ஈடுபடும் அகிலேஷ் யாதவ், சிறந்த போர்வீரன் ராணா சங்காவை துரோகி என்று கூறிய தனது எம்பி ராம்ஜிலால் சுமனை ஆதரிக்கிறார். இது ராஜபுத்திர சமூகத்திற்கு மட்டுமல்ல, முழு இந்து சமூகத்திற்கும் அவமானம்" என்றார்.

இதனிடையே, சோசலிசத் தலைவர் ராம் மனோகர் லோஹியாவின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ் பாஜகவை கடுமையாகத் தாக்கினார். பாஜக தனது அரசியலுக்கு ஏற்றவாறு வரலாற்று நிகழ்வுகளைத் தோண்டி எடுப்பதாகக் குற்றம் சாட்டினார்.

மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான கஜேந்திர சிங் ஷெகாவத், சுமனின் அறிக்கையைக் கண்டித்துள்ளார். அற்பமான புத்தியும், சிறிய மனமும் கொண்டவர்கள் மட்டுமே இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவார்கள் என்று அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை, விஸ்வ இந்து பரிஷத் (VHP) சுமனின் பேச்சு வெட்கக்கேடானது என்று விமர்சித்து, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரியது. சமனின் கருத்து சமாஜ்வாடி கட்சி இந்து எதிர்ப்பு மனநிலையைக் காட்டுகிறது என்றும் பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வரலாற்று ஆளுமைகள் குறித்த இத்தகைய கருத்துக்கள் உத்தரபிரதேச அரசியலை மிகவும் கீழான நிலைக்குத் தள்ளிவிட்டதாக அமித் மால்வியா கூறியுள்ளார்.

vuukle one pixel image
click me!