அட..! உண்மையான வாஷிங் பவுடர்தான் போலயே? அஜித் பவார் முகாமுக்கு கிடைத்த முக்கியத் துறைகள்!

By Manikanda Prabu  |  First Published Jul 14, 2023, 3:45 PM IST

மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கத்தில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்களுக்கு முக்கியத்துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன


மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன், ஏக்நாத்  ஷிண்டே தலைமையிலான அரசு ஆதரவு தெரிவித்து துணை முதல்வராகியுள்ளார். அவருடன் சேர்த்து மொத்தம் 9 பேர் அமைச்சர்களாக கடந்த சில தினங்களுக்கு பதவியேற்றனர்.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்களுக்கு நிதி, கூட்டுறவு, விவசாயம் உள்ளிட்ட 7 முக்கியத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஷிண்டே-பட்நாவிஸ் அரசாங்கத்தில் அஜித் பவார் அணி இணைந்ததில் இருந்தே அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பேசப்பட்டு வந்தது. அமைச்சர் பதவி ஒதுக்கீடு காரணமாக மூன்று பிரிவுகளுக்கும் மோதல் நிலவி வந்ததாகவும் கூறப்பட்ட நிலையில், அஜித் பவார் அணிக்கு முக்கியத்துறை ஒதுக்கப்பட்டுள்ளன.

Tap to resize

Latest Videos

undefined

அதன்படி, நிதி மற்றும் திட்டமிடல், உணவு மற்றும் சிவில் சப்ளைஸ், கூட்டுறவு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, விவசாயம், நிவாரணம் மற்றும் மறுவாழ்வு மற்றும் மருத்துவக் கல்வித் துறைகள் அஜித் பவார் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  புதிய அமைச்சரவை பட்டியல் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக துணை முதல்வர் அஜித் பவார் உறுதிப்படுத்தியுள்ளார்.

பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் ஜூலை 14: சந்திரயான்-3 வெற்றி பெற பிரதமர் மோடி வாழ்த்து!

இலாகா பகிர்வு பட்டியலை முதல்வர் அலுவலக அதிகாரிகள் ஆளுநர் மாளிகையில் அளித்துள்ளனர். அந்த பட்டியலுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பின், மேல் நடவடிக்கைக்காக, தலைமை செயலருக்கு அனுப்பி வைக்கப்படும்.

மகாராஷ்டிர அமைச்சரவையில் முதல்வர், இரண்டு துணை முதல்வர்களை தவிர, பாஜகவிலிருந்து ஒன்பது அமைச்சர்களும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிலிருந்து ஒன்பது அமைச்சர்களும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் இருந்து ஒன்பது அமைச்சர்களும் உள்ளன.

மகாராஷ்டிர அமைச்சரவையில் இப்போது பாஜகவிலிருந்து ஒன்பது அமைச்சர்களும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிலிருந்து ஒன்பதும், என்சிபியிலிருந்து ஒன்பது அமைச்சர்களும், முதல்வர் மற்றும் இரண்டு துணை முதல்வர்களைத் தவிர. அம்மாநில அமைச்சரவையில் அதிகபட்சமாக 43 பேர் இருக்கலாம்.

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோருடனான சந்திப்பின் போது தனது கட்சியினருக்கான முக்கிய இலாகாக்களை தொடர்ந்து வலியுறுத்திய அஜித் பவாருக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அவருக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

அதேசமயம் தற்போதைய நிலவரப்படி, அதிகம் விரும்பப்படும், நகர்ப்புற வளர்ச்சி, உள்துறை, நிதி மற்றும் வருவாய் ஆகிய நான்கு துறைகளில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிடம் ஒன்றே ஒன்று மட்டும்தான் உள்ளது. உள்துறை, வீட்டுவசதித்துறை பாஜகவின் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸிடம் உள்ளது.

முன்னதாக, எதிர்க்கட்சிகள் கூட்டத்தை விமர்சித்து பேசிய பிரதமர் மோடி, அவர்களது ஊழல் பற்றி விமர்சித்தார். மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மீது பாஜகவினர் தொடர் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அத்துடன், ஆளும் அரசாங்கத்தில் இணைந்த அஜித் பவார் தலைமையிலான அணியில் இருக்கும் பலர் மீது அமலாக்கத்துறை, சிபிஐ வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த பின்னணியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததை அஜித் பவார் விமர்சித்த எதிர்க்கட்சிகள், பாஜகவில் சேர்ந்தால் அனைவரும் தூய்மையாகி விடுவர்; மோடி வாஷிங் பவுடர் அனைவரையும் தூய்மையாக்கி விடும் என விமர்சித்தனர். குறிப்பாக, கூட்டுறவுத் துறையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய நிதி மோசடி செய்ததாக பாஜக இதற்கு முன்பு குற்றம் சாட்டியது. ஆனால், தற்போது அந்த கூட்டுறவுத்துறை அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டும் அரசியல் விமர்சகர்கள், மோடி வாஷிங் பவுடர் உண்மையாகவே பெஸ்ட் வாஷிங் பவுடர்தான் என கருத்து தெரிவிக்கின்றனர்.

click me!