Delhi Air Pollution:அன்று ஆடம்பரம் இன்று அவசியமானது ! டெல்லியில் காற்று சுத்திகரிப்பான் கருவிகள் விற்பனை ஜோர்!

By Pothy RajFirst Published Nov 4, 2022, 1:24 PM IST
Highlights

ஒரு நேரத்தில் ஆடம்பரப் பொருளாக இருந்த காற்று சுத்திகரிப்பான் கருவி, டெல்லி மக்களுக்கு இன்று அத்தியாவசியமான, அவசியமான கருவியாக மாறிவிட்டது. காரணம், அதிகரிக்கும் காற்று மாசால், காற்று சுத்திகரிப்பான் கருவி இல்லாமல் சுவாசிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஒரு நேரத்தில் ஆடம்பரப் பொருளாக இருந்த காற்று சுத்திகரிப்பான் கருவி, டெல்லி மக்களுக்கு இன்று அத்தியாவசியமான, அவசியமான கருவியாக மாறிவிட்டது. காரணம், அதிகரிக்கும் காற்று மாசால், காற்று சுத்திகரிப்பான் கருவி இல்லாமல் சுவாசிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

டெல்லியில் காற்று மாசு என்பது அதிதீவிரமான நிலைக்கு சென்றுள்ளதையடுத்து, மக்கள் தங்கள் உடல்நலத்தைக் காப்பாற்றிக்கொள்ள காற்று சுத்திகரிப்பான் கருவியை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

மோர்பி பாலம் விபத்து: எப்ஐஆர்-இல் ஒரேவா நிறுவனத்தின் பெயர் ஏன் இல்லை? ப.சிதம்பரம் கேள்வி

டெல்லியில் காற்று மாசுக் குறியீடு என்பது இன்று காலை 9.30 மணி அளவில் 400 குறியீட்டுக்கு மேல் இருக்கிறது. இது மனிதர்கள் சுவாசிப்பதற்கு ஏற்ற நிலை அல்ல, காற்றின் மாசைக் குறிக்கும் குறியீட்டில் அதிதீவிரமான நிலையாகும். இந்த காற்றை மனிதர்கள் தொடர்ந்து சுவாசிக்கும் போது சுவாசக் கோளாறு, நுரையீரல் கோளாறு, கண் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உபாதைகளைச் சந்திக்க நேரிடும். 

டெல்லியில் மக்கள் இயற்கையாக சுவாசிக்க முடியாத சூழல் ஏற்பட்டதையடுத்து, காற்று சுத்திகரிப்பான் கருவியின் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளனர். இதனால் தீபாவளிக்குப்பின், மக்கள் காற்று சுத்திகரிப்பான் கருவியை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

சுவாசிக்க முடியாத சூழல்! புகை சூழ் டெல்லி-என்சிஆர் மண்டலம்: என்ன காரணம்?

ஓ-2 கியூர் நிறுவனத்தின் இயக்குநர் கார்த்திக் சிங்கால் கூறுகையில் “ நகரங்களில் தொழிற்சாலை விரிவாக்கம், மக்கள் தொகை பெருக்கம், திடக்கழிவு மேலாண்மையில் முறையின்மை, கழிவுகளை எரித்தல், வாகனப் பெருக்கம் ஆகியவற்றாலும், இயற்கைக் காரணங்களாலும் காற்றின் தரம் கெட்டுவிட்டது. வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் காற்று மாசுஇருப்பது தெரிகிறது, இதனால்தான் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. 

இதன் காரணமாக மக்கள் காற்று சுத்திகரிப்பான் கருவிக்கு மாறி வருகிறார்Kல். டெல்லி, குர்கான், நொய்டாவில் உள்ள மக்கள் காற்று சுத்திகரிப்பான் கருவியின் அவசியத்தை உணர்ந்து அதிகளவில் வாங்கி வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்

மூச்சு முட்டும் காற்று மாசு ! டெல்லியில் தொடக்கப்பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை

மெஹ்ரா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி கூறுகையில் “ காற்று மாசு அதிகரித்துவிட்டதால், மக்கள் மத்தியில் காற்று சுத்திகரிப்பான் கருவியின் தேவையும் அவசியமாகிவிட்டது. இதனால் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக தெற்று டெல்லி, என்சிஆர், பகுதிகளில்வாழும் மக்கள் உயர்ந்த வாழ்க்கைத் தரம் கொண்டவர்கள், விழிப்புணர்வு கொண்டவர்கள் என்பதால் ஆர்வமாக வாங்குகிறார்கள்.

மக்களின் தேவையை அறிந்து நிறுவனங்களும் கருவிகளின் விலையைக் குறைத்து வருகின்றன காற்று சுத்திகரிப்பான் கருவி ரூ.15ஆயிரத்திலிருந்து ரூ.20ஆயிரம் வரை வரும். ஆனால், தற்போது மக்களின் தேவை, சிரமங்களை அறிந்து ரூ.7ஆயிரம் முதல் ரூ.8ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பங்களைப் பொருத்து ரூ.7ஆயிரம் முதல் ரூ.60ஆயிரம் வரை இருக்கிறது ” எனத் தெரிவித்தார்


அட்மோ பியூர் என்ற நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி மோஹித் சிங் கூறுகையில் “ காற்றின் தரம் குறைந்துவிட்டதால், மக்கள் தங்களுக்கும், குழந்தைகளுக்கும், வீட்டில் இருக்கும் முதியோருக்கும் சேர்த்து காற்று சுத்திகரிப்பான் கருவிகளை வாங்கி வருகிறார்கள். இந்த கருவி என்பது நம்முடைய சுவாசிக்கும் காற்றுக்கான விலை, சுகாதாரத்துக்கான முதலீடு என்று மக்கள் பார்க்கிறார்கள்” எனத் தெரிவித்தார்

காற்று சுத்திகரிப்பான் கருவியால் பயன் இருக்கிறதா என்று நுரையீரல் சிறப்பு மருத்துவர் ராகுல் சர்மாவிடம் கேட்டபோது அவர் கூறுகையில் “ எஹ்சிபிஏ வகை காற்று சுத்திகரிப்பான் கருவிகள் நன்றாக பயன் அளிக்கும் இதை நாங்கள் பரிந்துரைக்கிறோம். குறிப்பிட்ட கியூபிக் மீட்டர் அடிப்படையில்தான் காற்று சுத்திகரிப்பான் செயலாற்றும். காற்றுசுத்திகரிப்பான் வாங்கியபின் அதன் பில்டர் , செயல்பாடு ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும். ஆனால், ஹெச்இபிஏ வகை காற்று சுத்திகரிப்பான் விலை அதிகம்” எனத் தெரிவித்தார்

click me!