2024ஆம் ஆண்டு இறுதிக்குள், ஏர் இந்தியா ஒவ்வொரு ஆறு நாட்களுக்கும் ஒரு புதிய விமானத்தை தனது சேவையில் இணைக்கும்.2024ஆம் ஆண்டு இறுதிக்குள், ஏர் இந்தியா ஒவ்வொரு ஆறு நாட்களுக்கும் ஒரு புதிய விமானத்தை தனது சேவையில் இணைக்கும்
ஏர் இந்தியா நிறுவனம் இனி வாரம் தோறும் ஒரு புதிய விமானத்தை விமான சேவையில் இணைக்க உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் கூறியுள்ளார்.
புதன்கிழமை மாலை மும்பையில் நடந்த புதிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன், "சராசரியாக... 2024ஆம் ஆண்டு இறுதிக்குள், ஏர் இந்தியா ஒவ்வொரு ஆறு நாட்களுக்கும் ஒரு புதிய விமானத்தை தனது சேவையில் இணைக்கும்" என்றார்.
போயிங் நிறுவனத்தில் ஆர்டர் செய்யப்பட்ட 190 விமானங்களில் (போயிங் 737 மேக்ஸ்) முதல் இரண்டு விமானங்கள் ஏற்கனவே சேவையில் இணைந்துள்ள நிலையில் தொடர்ந்து புதிய விமானங்கள் சேர்க்கப்படுவது குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
அயோத்தி ராமர் கோயிலுக்கு வெளிநாட்டினரும் நன்கொடை அளிக்க அனுமதி!
Dear Guests, Fasten your seatbelts for the moment we've all been waiting for. We're thrilled to unveil the new X factor in Indian aviation - the new livery of Air India Express. pic.twitter.com/Vif5GDQJlH
— Air India Express (@AirIndiaX)ஏர் இந்தியா நிறுவனம் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறத்தை கொண்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த விமானம் ஏர் இந்தியாவின் சமீபத்திய குறைந்த கட்டண விமான சேவையின் ஒரு பகுதியாக செயல்பட உள்ளது. புதன்கிழமை நடைபெற்ற அறிமுக நிகழ்வில் வெள்ளை, ஆரஞ்சு நிறங்களிளும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் முதல் முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டது.
"ஏர் ஏசியா இந்தியா பிராண்டை நாங்கள் கைவிடுகிறோம். இன்னும் கொஞ்ச காலத்திற்கு விமான எண்களில் IX மற்றும் I5 ஆகியவற்றைக் காணலாம். ஆனால் சேவைகள், விற்பனை மற்றும் விநியோகம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிராண்டிங்கின் கீழ் செய்யப்படும்" என்று விமான நிறுவனத்தின் இயக்குநர் அலோக் சிங் கூறியுள்ளார்.
1990 களில், கிரேக்கத்தைச் சேர்ந்த குறைந்த விலை விமான சேவையான ஈஸிஜெட் வெள்ளை மற்றும் ஆரஞ்சு வண்ணங்களில் இயக்கப்பட்டது. பின், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெட்ஸ்டாரும், 2003 முதல் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறங்களில் குறைந்த கட்டண விமானத்தை இயக்குகிறது. சமீபத்தில் ஆகாசா ஏர் விமானமும் இதேபோன்ற வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மீண்டும் மருத்துவமனை மீது தாக்குதல்; அலறி அடித்து ஓடும் மக்கள்; நரகம் போல் காட்சி அளிக்கும் காசா!