அதிமுக மாநிலச் செயலாளர் அதிரடி கைது; பேருந்துகள் இயங்காததால் மக்கள் தவிப்பு

By Velmurugan sFirst Published Dec 28, 2022, 9:20 AM IST
Highlights

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி இன்று முழு அடைப்புக்கு அதிமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைாக அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகனை காவல் துறையினர் கைது செய்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்  போராட்டங்களை நடத்தி வருகின்றன. அண்மையில் முதல்வர் ரங்கசாமி, மாநில அந்தஸ்து வழங்கப்படாததால் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை. தங்களை தேர்வு செய்த மக்களுக்கு எந்தவொரு நல்ல காரியத்தையும் செய்ய முடியவில்லை என்று வெளிப்படையாகவே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ரங்கசாமியின் கருத்துக்கு கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுள்ள பாஜக உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அய்யயோ.. என்னடா இது வம்பா போச்சு.. சீனாவிலிருந்து மதுரை வந்த தாய், மகளுக்கு புதிய வகை கொரோனா தொற்று?

இந்நிலையில் புதுச்சேரியில் மாநில அந்தஸ்து வழங்கக் கோரி அதிமுகவின் மாநிலச் செயலாளர் அன்பழகன் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி புதுச்சேரியின் மீது அக்கறைக் கொண்டுள்ள ஒவ்வொரு அமைப்பும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அன்பழகனின் முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு காலத்தில் தான் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள். அப்படிப்பட்ட சூழலில் முழு அடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டால் அது புதுச்சேரிக்கு மிகுந்த பின்னடைவை தான் ஏற்படுத்தும் என்று தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் அறிவித்தபடி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அன்பழகன் தெரிவித்திருந்த நிலையில், அவர் இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டார். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Makkal ID : ஆதார் கார்டு போல.. தமிழ்நாட்டு மக்களுக்கென தனி அடையாள அட்டை - தமிழக அரசின் புது அறிவிப்பு

மேலும் புதுவையில் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக இன்று பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. தனியார் பேருந்துகள், ஆட்டோகள் இயங்காததால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 

click me!