கூட்டு பாலியல் வன்முறை.. கற்பழிக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட பெண் - ஐவரை தூக்கிய போலீசார் தீவிர விசாரணை!

By Ansgar R  |  First Published Nov 13, 2023, 2:51 PM IST

Woman Gang-Raped : உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ராவில், ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வந்த பெண், தான் பணி செய்து வந்த இடத்திலேயே சிலரால் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளார். இது தொடர்பாக போலீசார் ஐவரை கைது செய்துள்ளனர். 


உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஹோட்டலில் பெண் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர். நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு அந்தப் பெண்ணிடமிருந்து தங்களுக்கு அழைப்பு வந்தது, அதைத் தொடர்ந்து அவர்கள் அண்ட் Homestayவிற்கு விரைந்து சென்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
  
"சனிக்கிழமை இரவு, தாஜ்கஞ்ச் போலீஸாருக்கு ஒரு ஹோம் ஸ்டேயில், அங்குள்ள பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டதாக கூறி அழைப்பு வந்தது. பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின்படி, தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று உதவி ஆணையர் அர்ச்சனா சிங் காவல்துறை, ஆக்ரா சதர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Hyderabad fire accident: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து; 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

Tap to resize

Latest Videos

சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து, ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டதாக ஆக்ரா போலீசார் தெரிவித்தனர். இந்த கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட  அந்த பெண், அதே ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர் என போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக வெளியான வைரல் வீடியோ ஒன்று, பாதிக்கப்பட்ட நபர் ஒரு குழுவால் தாக்கப்பட்டதைக் காட்டுகிறது.

"இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, இந்த வழக்கில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ஆக்ரா சதர் காவல்துறை உதவி ஆணையர் அர்ச்சனா சிங் கூறினார்.

உத்தரகாண்ட் சுரங்க விபத்து: 2ஆவது நாளாக தொடரும் மீட்பு பணி; ஆக்சிஜன், உணவு விநியோகம்!

இந்த விவகாரத்தில் கற்பழிப்பு, தாக்குதல் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!