தேர்தல் வெற்றி; 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி: அகமதாபாத்தில் பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு

By Pothy RajFirst Published Mar 11, 2022, 1:16 PM IST
Highlights

5 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப் தவிர்த்து, 4 மாநிலங்களிலும் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அகமதாபாத்துக்கு 2நாட்கள் பயணமாக இன்று சென்ற பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

5 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப் தவிர்த்து, 4 மாநிலங்களிலும் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அகமதாபாத்துக்கு 2நாட்கள் பயணமாக இன்று சென்ற பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

5 மாநிலத் தேர்தல்

உ.பி. உத்ரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து நேற்று வாக்கு எண்ணப்பட்டது. இதில் பஞ்சாப் தவிர்த்து, 4 மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இதில் 36 ஆண்டு கால வரலாற்றை உடைக்கும் விதத்தில் உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து 2-வது முறையாக பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. உத்தரகாண்டில் 2-வது முறை, மணிப்பூர், கோவாவில் 2-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.

இதைப் படிக்க மறக்காதிங்க:Crude oil price : கவலை தரும் கச்சா எண்ணெய் விலை உயர்வு: சவால்களைச் சமாளிக்குமா மத்திய அரசு?

தீவிரப் பிரச்சாரம்

இந்த 5 மாநிலத் தேர்தலுக்காக பிரதமர் மோடி பல்வேறு நகரங்களுக்கும் சென்று சூறாவளிப்பயணம் சென்று பிரச்சாரம் செய்தார். பிரதமர் மோடி, உள்துறைஅமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, பாஜக மூத்த தலைவர்கள், அமைச்சர்களின் தீவிரமானப் பிரச்சாரம் 4 மாநிலங்களில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற உதவியது.

உற்சாக வரவேற்பு

இந்நிலையில் 4 மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சிஅமைப்பதைத் தொடர்ந்து, 2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி குஜராத்துக்கு இன்று சென்றார். அகமதாபாத் விமானநிலையத்திலிருந்து, பாஜக தலைமை அலுவலகம் வரை பிரதமர் மோடி சாலைமார்க்கமாக ஊர்வலமாகச் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி அவரைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறமும் கூடியிருந்தனர். பிரதமர் மோடி வரும் வழியெங்கும் மக்கள் மலர்களைத் தூவி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். 

பிரதமர் மோடி ஏறக்குறைய 10கி.மீ தொலைவுக்கு சாலை மார்க்கமாகவே ஊர்வலமாகச் சென்று மக்களைச் சந்தித்தார். பிரதமர் மோடியைப் பார்த்த மக்கள் ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கி ஜே என்று கோஷமிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், பாஜக மாநிலத் தலைவர் சி.ஆர் பாட்டீல் ஆகியோரும் உடன் இருந்தனர். 

இதைப் படிக்க மறக்காதிங்க: up election result: இலவச ரேஷன் திட்டத்துக்கு மாதம் ரூ.300 கோடி: தேர்தலுக்கு முன் செலவிட்ட உ.பி. அரசு

2 நாட்கள் பயணம்

இன்று மாலை 4 மணிக்கு நடக்கும் குஜராத் பஞ்சாயத் மகாசம்மேளனம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச உள்ளார். 
காந்திநகர் மாவட்டம், லாவட் நகரில் உள்ள ராஷ்ட்ரிய ரக்ஸ பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்கும் பிரதமர் மோடி  மாலை 6.30 மணிக்கு உரையாற்றுகிறார். 

 

வெற்றி நாயகன் மோடிக்கு உற்சாக வரவேற்பு..! ஐந்து மாநில தேர்தல் வெற்றிக்குப் பிறகு, குஜராத்தின் அகமதாபாத்தில் மக்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக சென்று நன்றி தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி pic.twitter.com/r3kTZhyO6T

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

அதன்பின் அகமதாபாத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளார். அகமதாபாத்தில் நடக்கும் மிகப்பெரிய கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசும் முன்பாக, பாஜக நிர்வாகிகள், தலைவர்களைச் சந்தித்துப் பேச உள்ளார்.

இதைப் படிக்க மறக்காதிங்க: up election result: உ.பியில் 36 ஆண்டுகால வரலாறு உடைந்தது பாஜக: மோடி-யோகி மேஜிக்: அரியணையில் ‘பாபா புல்டோசர்’

இதற்கிடையே அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகியவற்றில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த மாநிலங்களில் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சியில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

click me!