கருப்பு பூஞ்சையால் கதிகலங்கும் இந்தியா... 18 மாநிலங்களை வாட்டி வதைக்கும் கொடூரம்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 25, 2021, 12:15 PM IST
Highlights

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ள நிலையில், கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ள நிலையில், கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

கொரோனா பரவலின் 2வது காரணமாக கடந்த மாதம் இந்தியாவில் தினசரி பாதிப்பு நான்கரை லட்சமாக இருந்தது. தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 2 வாரத்திற்கும் மேலாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் தொற்றின் பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. 

இந்தியாவில் தொடர்ந்து 8வது நாளாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. அதேபோல் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலின் 3வது அலை குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும் என்பதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை என மத்திய அரசு மறுத்துள்ளது. 

ஆனால் அதே நேரத்தில் கொரோனாவைத் தொடர்ந்து அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை பாதிப்பு மகாராஷ்டிரா, குஜராத் உட்பட 18 மாநிலங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு  பரவி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்து 556 பேர் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில் அதில் 55 சதவீதம் பேர் சர்க்கரை நோயாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!