2 ஆண்டு இழுபறிக்குப் பின் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி தேர்வு

By SG Balan  |  First Published Mar 16, 2023, 12:08 PM IST

தலைநகர் டெல்லியில் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் பதவி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக இருந்த நிலையில் புதிய அதிகாரியை நியமிக்க அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.


நீண்ட காலத்துக்குப் பிறகு முன்னாள் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவருமான எரிக் கார்செட்டி இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் செனட் சபை எரிக்கை இந்தியாவுக்கான தூதராக நியமிப்பதற்கு ஆதரவாக 52-42 என வாக்களித்துள்ளது. விரைவில் எரிக் கார்செட்டி டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லமான ரூஸ்வெல்ட் மாளிகைக்கு வர இருக்கிறார். இதன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக இருந்த அமெரிக்க தூதர் பணிக்கு புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

இதற்கு முன் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்தவர் கென்னத் ஜஸ்டர். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி நாடு திரும்பினார். அதற்குப் பிறகு 26 மாதங்களாக புதிய தூதர் நியமிக்கப்படவில்லை. தலைநகர் டெல்லியில் இவ்வளவு நீண்ட காலத்திற்கு அமெரிக்க தூதர் இல்லாமல் இருந்தது இதுவே முதல் முறை.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பற்றி கூகுளில் தேடியவருக்கு மரண தண்டனை

1993ஆம் ஆண்டு மார்ச் மாதம் டெல்லியில் அப்போதைய அமெரிக்கத் தூதராகப் பணியாற்றிய தாமஸ் பிக்கரிங் ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு மாற்றப்பட்டார். அப்போது ஃபிராங்க் விஸ்னரை அடுத்த தூதராக நியமிக்க அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு 14 மாத அவகாசம் தேவைப்பட்டது. அதற்குப் பின் தற்போதைய புதிய தூதரை நியமிக்க கிட்டதட்ட அதைவிட இருமடங்கு கூடுதல் அவகாசம் ஆகியிருக்கிறது.

இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராகும் எரிக் கார்செட்டி அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளார். "அமெரிக்க தூதராக பணியாற்ற எரிக் கார்செட்டி ஒரு சிறந்த தேர்வாகும்... உலகப் பொருளாதாரம் மற்றும் தேசியப் பாதுகாப்பிற்கு இந்தியாவின் முக்கியத்துவம், வரும் ஆண்டுகளில் தொடர்ந்து வளரும். இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவை வழிநடத்த ஒரு நிலையான சக்தி மிகவும் அவசியம்" என்று கலிஃபோர்னியாவைச் சேர்ந்த தொழிலதிபரான யோகி சுக் கூறியுள்ளார்.

மயானமாக மாறும் குஜராத் ஜெயில்கள்! காவல் நிலைய மரணங்களில் முதலிடம்!

click me!