வெப்ப அலைகளால் 2100 ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியாவில் யாரும் உயிர்வாழ முடியாதாம்… அதிர்ச்சி தகவல்….

 
Published : Aug 04, 2017, 07:11 AM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
வெப்ப அலைகளால் 2100 ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியாவில் யாரும் உயிர்வாழ முடியாதாம்… அதிர்ச்சி தகவல்….

சுருக்கம்

after 2100 hear will be increased

வெப்ப அலைகளால் 2100 ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியாவில் யாரும் உயிர்வாழ முடியாதாம்… அதிர்ச்சி தகவல்….

புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றங்கள் போன்ற காரணங்களால் இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகள் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் 2100 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் யாரும் வாழ முடியாது என அறிவியல் முன்னேற்றங்கள் என்ற இதழில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பூமியில் நிலவும் வெப்ப நிலையை ஈரப்பதம் சேர்ந்தது மற்றும் ஈரப்பதம் சேராதது என அறிவியலாளர்கள் பிரித்து வைத்துள்ளனர். இதில் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை ஆவியாக்கிய பிறகு கிடைக்கும் குறைந்தபட்ச வெப்பநிலை, ஈரப்பதம் சேர்ந்த வெப்பநிலையாக அறியப்படுகிறது.

இந்த வெப்பநிலை 2100-ம் ஆண்டுவாக்கில் இந்தியாவில் 35 டிகிரி செல்சியசாக அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அப்போது அதிக வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பதத்தால் மனித உடல் தகுதி இழந்து நோய்களும், மரண எண்ணிக்கையும், அறிதல் திறன் குறைபாடுகளும் அதிகரிக்கும் என்றும்,  நல்ல உடல்நலத்துடன் இருப்பவர்கள் கூட மரணத்துக்கு தப்ப முடியாது எனவும்  அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் இதன் தாக்கம் இருந்தாலும், அடர்த்தியான மக்கள் தொகை நிறைந்த கங்கை நதிப்படுகை, சிந்து சமவெளிப்பகுதிகளில் இதனால் மிகுந்த பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்டு உள்ளது. 

ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் நாடுகளில் ஏற்பட்ட பயங்கர வெப்ப அலைகளுக்கு 3,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலை தொடர்ந்தால் 2100-ம் ஆண்டில் இந்தியாவில் உயிர்வாழ்வது கடினம் என ஆய்வில் தெரியவந்துள்ளதாக ‘அறிவியல் முன்னேற்றங்கள்’ என்ற ஆய்வு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

 

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!