
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து அத்வானியை நீக்க மோடி செய்த சதிதிட்டம் என ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து விடுக்கப்பட்ட பா.ஜனதா தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்ட 13 பேரை சி.பி.ஐ. மீண்டும் விசாரிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ் கூறியதாவது:
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து அத்வானியை நீக்க மோடி செய்த சதிதிட்டம் ஆகும்.
ஜனாதிபதி தேர்தலுக்கு பா.ஜனதா தரப்பில் அத்வானி நிறுத்தப்படலாம் என்று பேசப்பட்டு வந்தது.
ஆனால் சி.பி.ஐ. தனது கட்டுப்பாட்டில் இருப்பதை சரியான நேரத்தில் பயன்படுத்தி அத்வானி ஜனாதிபதி ஆக விடாமல் மோடி தடுத்துவிட்டார்.
பா.ஜனதா ஒரு ஆபத்தான கட்சி. அது மற்றவர்களை மட்டுமல்லாமல் சொந்த கட்சிகாரர்களையே கூட நம்ப விடாமல் செய்து விடும்.
ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து அத்வானியை நீக்க வேண்டும் என்ற மோடியின் ஒரு அரசியல் சதிதிட்டம் என்பதை எல்லோராலும் புரிந்துக் கொள்ள முடியும்.
குஜராத் கலவரத்தின் போது மோடிக்கு அத்வானி ஆதரவு கொடுத்தார். அப்போதைய பிரதமர் வாஜ்பாய், அரசு தர்மத்தை மோடி பின்பற்ற வேண்டும் என கூறினார்.
ஆனால் அத்வானி மோடியை காப்பாற்றினார்.
இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார்.