53 வருட வரலாற்றில் இதுவரை இல்லாத குடும்ப அரசியல்... திடீரென முதல்வர் வேட்பாளராக மகனை களமிறக்கும் அரசியல் தலைவர்..!

By vinoth kumarFirst Published Oct 1, 2019, 12:11 PM IST
Highlights

மகாராஷ்டிராவில் சிவசேனாவை பால் தாக்கரே கடந்த 1966-ல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அப்போதிருந்தே தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்த யாரும் தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. இந்நிலையில், முதல்முறையாக பால்தாக்கரே குடும்பத்தில் அவரது பேரன் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளார். 

மகாராஷ்டிராவில் சிவசேனாவை பால் தாக்கரே கடந்த 1966-ல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அப்போதிருந்தே தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்த யாரும் தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. இந்நிலையில், முதல்முறையாக பால்தாக்கரே குடும்பத்தில் அவரது பேரன் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளார். 

மகாராஷ்டிராவில், பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சிவசேனா 18 தொகுதிகளிலும், பாஜக 23 தொகுதிகளிலும் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சியையும் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் பின்னுக்குத் தள்ளின. 

இந்நிலையில், மகாராஷ்டிராவில் வரும் 21-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இந்த சட்டப்பேரவை தேர்தலிலும் இந்த இரு கட்சிகளும் கைகோக்க முடிவு செய்துள்ளன. ஆனால், தொகுதி இழுபறி தொடர்ந்து நீடித்து வருகிறது. தொகுதி இழுபறிக்கு மத்தியில், சிவசேனா தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விஷயம் ஒன்று நடந்துள்ளது.

வருகிற சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஒர்லி தொகுதியில் போட்டியிடுவார் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. சுனில் ஷிண்டே, தனது இடத்தை ஆதித்யா தாக்கரேக்கு விட்டுக் கொடுத்துள்ளார். சிவசேனாவுக்கு மிகவும் பாதுகாப்பான தொகுதியாக ஒர்லி இருக்கிறது. எனவேதான் அந்த தொகுதிக்கு ஆதித்யா தாக்கரேயின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சச்சின் அஹிர் சமீபத்தில் சிவசேனாவில் சேர்ந்ததால் ஆதித்யா தாக்கரேயின் வெற்றி இன்னும் எளிதாகி இருக்கிறது” என்றார்.

கடந்த 2014-ம் நடந்த தேர்தலில் ஒர்லி தொகுதியில் போட்டியிட்ட சச்சின் அஹிர் சிவசேனா வேட்பாளர் சுனில் ஷிண்டேயிடம் தோற்றுப்போனார். சிவசேனா கட்சி கடந்த 1966-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதிருந்தே தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்த யாரும் தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. அதேபோல எந்தவொரு அரசமைப்பு சார்ந்த பதவியையும் அவர்கள் வகித்ததில்லை. ஆதித்யா தாக்கரே வெற்றி பெறும் பட்சத்தில் அந்த 53 ஆண்டுக்கால குடும்பத்தில் இருந்து மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படும் முதலாவது நபராக ஆதித்யா தாக்கரே இருப்பார்.

click me!