தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்த பரிதாபம் … குஜராத்தில் சோகம் !!

Published : Sep 30, 2019, 11:32 PM IST
தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்த பரிதாபம் … குஜராத்தில் சோகம் !!

சுருக்கம்

குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் இன்று மாலை தனியாருக்கு சொந்தமான சொகுசு பேருந்து மலைப்பாங்கான சாலையில் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.  

குஜராத் மாநிலத்தின் வடக்குதியில் உள்ள பனஸ்கந்தா மாவட்டத்துக்குட்பட்ட அம்பாஜி-டன்ட்டா சாலை வழியாக தனியாருக்கு சொந்தமான ஒரு சொகுசு பேருந்து  சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து திரிஷுல்யா காட் என்ற மலைப்பாங்கான இடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது.

இன்று மாலை நடந்த இந்த விபத்தில் 21 பேர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர். காயமடைந்த சுமார் 50 பேர்  அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்து நடந்த இடத்தில் இறந்தவர்களின் சிதறிக் கிடந்தது அனைவரையும் அதிர்ச்சி டையச் செய்துள்ளது. இந்த கோர விபத்து தொடர்பான தகவலறிந்த பிரதமர் மோடி அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளார்.

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க முதலமைச்சர் விஜய ரூபானி உத்தரவிட்டுள்ளார்.  

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!